ஆதவ் அர்ஜுனா இன்.. ஜான் அவுட்.. விஜய் ரொம்ப ஆசைப்பட்ட அந்த விஷயம்.. நடக்காமல் போயிடுச்சே!
சென்னை: நடிகர் விஜயின் த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.
த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்பதால், ஜான் ஆரோக்கியசாமிக்கான பொசிசன் எது என்பது தெரியவில்லை. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியாது என்பதால், த.வெ.க.வுடன் போட்டுக்கொண்ட ஒபந்தத்தில் இருந்து ஜான் விலகி விடுவார் என்கிற பேச்சு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவும் ஜானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம்.

இதனை ஜான் ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணையச் சொல்லி விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆதவ்வோ, "இப்போதைக்கு வேண்டாம். தேவையற்ற காண்ட்ராவெர்சி உருவாகும். தேர்தல் வியூகம் தொடர்பான பணிகள் மட்டுமே இப்போதைக்கு இருக்கட்டும்" என்று கூறியுள்ளாராம். அதனால் த.வெ.க.வில் ஆதவ் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் அடுத்த வாரம் முறைப்படி விஜய் அறிவிப்பார் என்கிறார்கள்.
ஜான் யார்?:
விஜய்க்கு பின்னணியில் இருந்தது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள். தற்போது அந்த இடத்தைதான் ஆதவ் அர்ஜுனா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications