Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிக்கு ஆளுநர் பதவி.. மகளுக்கு எம்பி பதவி? லதா - ரஜினிகாந்த் போடும் பெரிய திட்டம்? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தில் நெருக்கடி அதிகமாகியிருக்கிறதாம். அதாவது, ஜெயிலர் படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றிருப்பதும், ரஜினியின் ரசிகர்கள் இன்னமும் அதே வீரியத்துடன் இருப்பதும் ரஜினி மனைவி லதா, ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ஆகிய இருவரும் அரசியல் ரீதியாக ஆலோசித்திருக்கிறார்களாம்.

2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக கால் பதிக்க முடியாத காரணத்தால் ரஜினிகாந்த் மூலம் பாஜக களமிறங்குகிறது. பாஜக - ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன.

Is Actor Rajinikanth planning to get governor post from BJP and What is Latha Rajinikanth planning?

அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.

முக்கியமாக கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்றும் ரஜினி பேசினார். அவரின் கட்சியில் அண்ணாமலை அப்போது இணைய போவதாகவும் பேச்சுக்கள் வந்தன. ஆனால் ரஜினி அதன்பின் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முக்கியமாக அவரின் லூஸ் டாக் பேச்சுக்கள், பாஜக ஆதரவு நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதை எல்லாம் ரஜினி பார்த்து கடும் அதிர்ச்சியும் அடைந்தார்.

அதேபோல் தேர்தல் கருத்து கணிப்புகளும் ரஜினிக்கு ஆதரவாக வரவில்லை. கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து விலகினார். தன்னால் வெளியே வர முடியாது, உடல்நிலை சரியில்லை என்று ரஜினி இப்படி கூறினார். ஆனால் என்னவோ அதன்பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ரஜினி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவுடன் நெருக்கம் ஆகும் விதமாக ரஜினிகாந்த் ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.

அரசியல் வருகை: அரசியலுக்கு வருவதாகச் சொல்லி, ஏமாற்றியதால் ரஜினியின் இமேஜ் குறைந்த நிலையில், ஜெயிலர் படம் மீண்டும் இமேஜை கூட்டியிருப்பதாக நம்புகிறது ரஜினியின் குடும்பம். அதனால், இந்த இமேஜை வைத்து பாஜகவில் சில காரியங்களை சாதிக்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள். அதாவது, "கணவருக்காக கவர்னர் பதவி, மகளுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்க வேண்டும்" என விரும்புகிறார் லதா.

Is Actor Rajinikanth planning to get governor post from BJP and What is Latha Rajinikanth planning?

இதற்காக, ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் லதா ரஜினிகாந்த். அதாவது, பாஜக தலைமையிடம் பேசுங்கள், பேசுங்கள் என நச்சரிக்கிறாராம் லதா. ஆனால், "இதெல்லாம் பேசமுடியாது. கவர்னர் பதவின்னா அவ்வளவு சாதாரணமா ? " என்று மனைவியிடம் கடுப்படித்துள்ளார் ரஜினி. அப்போது, அம்மாவுக்குத் துணையாக செளந்தர்யா, " உங்க இமேஜை பயன்படுத்திக்க பாஜக கட்சி விரும்புகிறது. அதற்கு பலனாக நாமும் சில விசயங்களை எதிர்பார்ப்பது தப்பில்லைப்பா. அம்மா சொல்வதில் தப்பு இல்லை.

கவர்னர் பதவிக்கு நீங்க தகுதியானவர். நீங்க ஏதேனும் கேட்க மாட்டீங்களான்னு தான் அவங்களும் (பாஜக) எதிர்பார்க்கிறாங்க. நீங்க கேட்கலாமே அப்பா" என்று ரஜினியிடம் வலியுறுத்தும் வகையில் அடம்பிடிக்கிறாராம். ஆனால் மனைவியும் மகளும் கொடுக்கும் நெருக்கடியில் உடன்பாடில்லாத ரஜினி, அவர்களின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ' தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவில்லை. எனது ரசிகர்கள், அவர்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் ' என்று வெளிப்படையாக சொல்வதற்கு தயாராகியுள்ளார் ரஜினி. முதல் கட்டமாக தனது அண்ணனை வைத்து இந்த கருத்தை வெளிப்பட வைத்துள்ளார் ரஜினி என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+