இடதும் இல்லை! வலதும் இல்லை! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த.. அந்த அரசியல் ஸ்டைலை கையிலெடுத்த விஜய்
சென்னை: இந்தியாவில் தேசிய அரசியலை உலுக்கிய ஒரு முக்கிய அரசியல் கொள்கையை விஜய் கையில் எடுத்து உள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது. அவரின் இன்றைய பேச்சு மாநில அரசியலை புரட்டி போடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய அளவில் பாஜக - காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகள் மட்டும் கோலோச்சிய காலம் அது. மற்ற சில தேசிய கட்சிகள் இருந்தாலும் அவர்கள் இரண்டு - மூன்று மாநிலங்களில் மட்டும் அவை கோலோச்சின.

இதில் பாஜக வலதுசாரி. காங்கிரஸ் மைய - இடதுசாரி கொள்கையை கொண்டு இருந்தது. இரண்டு பேருமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு மாற்று அரசியல் இல்லாத நிலைமை இருந்தது. என்றால் மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் உடன் கூட்டணி இருந்தது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் ஒன்று அதிமுக - இல்லை திமுக. இல்லையென்றால் நாம் தமிழர். இது மூன்றுமே இன அடிப்படையில் உரிமையை பேசும் கட்சிகள்தான்.
தேசிய அரசியல் மாறியது: இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய அரசியல் மாறும் வகையில் ஆம் ஆத்மி தோன்றியது. அந்த கட்சிக்கு தனிப்பட்ட கொள்கை என்று கிடையாது. மாறாக ஒவ்வொரு விஷயங்களுக்கு ஏற்றபடி நிலைப்பாடு எடுத்தது. சில விஷயங்களில் வலதுசாரி போல செயல்படும்.. சில விஷயங்களில் இடதுசாரி போல செயல்படும்.
சில சமயங்களில் மைய கொள்கை கொண்டு இருக்கும். அக்னி பாத்தை தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கும் ஆம் ஆத்மி நீட்டை ஆதரித்தது. இப்படி காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் இடையில் இருந்து கொண்டு அதிகபட்சம் welfare அரசியலை மட்டும் ஆம் ஆத்மி முன்னெடுத்தது. காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் வாக்களித்து அலுத்து போனவர்களுக்கு இந்த மாற்று அரசியல் பெரிய நல் வாய்ப்பாக இருந்தது.
விஜய் அரசியல்: இந்த நிலையில் விஜய் அதே போன்ற திமுக - பாஜக இல்லாத மைய அரசியலை எடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மாணவர்கள் மீட்டிங்கில் திமுகவை சாடி பேசிய விஜய் இன்று பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி உள்ளார். விஜய் திமுகவை எதிர்ப்பது உறுதியாகிவிட்டது. அவர் திமுகவைத்தான் நேரடியாக, மறைமுகமாக சீண்டி வருகிறார். தேர்தல் வெற்றிகளில் வாழ்த்து சொல்வதில் திமுகவை தவிர்ப்பது தொடங்கி நீட்டிற்கு எதிராக பொங்காமல் கள்ளச்சாராய விவகாரத்தில் மட்டும் கருத்து சொல்வது என்று விஜய் "selective" ஆக அரசியல் செய்ய தொடங்கிவிட்டார்.
நல்ல தலைவர்கள் இல்லை என்றெல்லாம் விமர்சனம் வைக்கும் விதமாக திமுகவை தாக்கி விஜய் பேசி உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்து இருந்தார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
பாஜக எதிர்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் தற்போது நேரடியாக பாஜகவின் அடிப்படை கொள்கையையே எதிர்த்து உள்ளார். பாஜக உறுதியாக இருக்கும் நீட் விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை விஜய் வைத்துள்ளார்.
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு.
சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும்?, என்று கூறியுள்ளார்.
இடதையும் எதிர்த்து.. இப்போது வலதையும் எதிர்த்து.. இந்தியாவில் தேசிய அரசியலை உலுக்கிய ஒரு ஆம் ஆத்மி ஸ்டைல் அரசியல் கொள்கையை விஜய் கையில் எடுத்து உள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications