2026ல் தமிழகத்தில் நடிகர் விஜய் ஆட்சி தான்.. சத்தியம் டிவி சர்வேயில் 38 சதவீதம் பேர் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆட்சியை பிடிப்பாரா? என்ற கேள்விக்கு 38 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தார். அதன்படி போட்டியிடவில்லை. மாறாக 2026ல் தமிழகத்தில் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

vijay tvk

தற்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பயணித்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நம் மாநிலத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.

இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடிகர் விஜய் ஆட்சியை
ஆட்சியை பிடிப்பாரா விஜய்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஆம், இல்லை, பதிலளிக்க விரும்பவில்லை என்ற 3 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. அதில் ஆம் என்று 38 சதவீதம் பேரும், இல்லை என்று 35 சதவீதம் பேரும், கருத்து கூற விருப்பம் இல்லை என்று 27 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

அதன்படி பார்த்தால் சத்தியம் டிவியின் சர்வேயில் நடிகர் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்றே அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+