Exclusive அண்ணாமலைக்கு மணி கட்டியாச்சா? மலரும் பாஜக - அதிமுக கூட்டணி? புட்டு புட்டு வைக்கும் பாண்டே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையால் தான் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது என அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர். அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணி மலர வாய்ப்புள்ளதாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.

கேள்வி: அண்ணாமலை லண்டன் பயணம் முடிந்து திரும்புவதற்கு பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் மலர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், ராம.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்து விருப்பத்தோடு இருப்பதை பார்க்கமுடிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

rangaraj pandey annamalai bjp

பாண்டே பதில்: பாஜகவை பொறுத்தவரை அகில இந்திய தலைமை தான் கூட்டணி பற்றி முடிவெடுக்கும். நயினார் நாகேந்திரனின் தொகுதியில் அவர் வெற்றி பெற அதிமுக - பாஜக கூட்டணி அவசியமாக இருக்கிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் தனது வெற்றி உறுதி என்பதால் நயினார் நாகேந்திரன் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி என்கிறார்.

திமுக - அதிமுக என இரு பெரிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்தக் கட்சி வேண்டாம் என்றால் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தப் போகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் தேவை என்ன? மற்ற கட்சிகள் எதற்காக? கூட்டணி சேர்ந்த கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு தளர்வைச் சந்தித்திருக்கின்றன என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீண்டகால நோக்கில் பாஜக, அதிமுக உடனான கூட்டணியை துறந்திருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணி: 2026ல் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்தால் நல்ல ஓட்டுகளை பெற முடியும். அதில் சந்தேகமில்லை. 2024 லோக்சபா தேர்தலிலும் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் திமுக கூட்டணி 25 சீட்டுகளுக்கு மேல் ஜெயித்திருக்க முடியாது. ஆனால், அதிமுக அந்தக் கூட்டணியை விரும்பவில்லை. அதேபோல, கூட்டணி வேண்டாம் என நினைத்தார் அண்ணாமலை. ஆனால் பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவிட முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை.

அதிமுக, சசிகலாவை நீக்கியது ஏன்? டிடிவி தினகரனை நீக்கியது ஏன்? ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது ஏன்? சசிகலா ஜெயலலிதாவோடு இருந்தபோது உத்தமியாக இருந்து, அதற்கடுத்த ஒன்றரை வருடத்தில் ஏதாவது தப்பு செய்துவிட்டாரா? அவரை நீங்கள் தலைவியாக ஏற்கவில்லையா? ஜெயலலிதாவுக்கு சசிகலா செய்த பச்சைத் துரோகம் என்ன எனச் சொல்லுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீக்குவீர்கள். எந்தக் காரணமும் சொல்லமாட்டீர்கள்.

அண்ணாமலை காரணம் எனச் சொல்வது நொண்டிச் சாக்கு: அதிமுக ஒரு முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என 2023ல் தான் தெரிந்ததா? தமிழ்நாட்டுக்கு பாஜக ஒன்றும் செய்யவில்லை என திடீரென்று தான் ஞானோதயம் வந்ததா? கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்கு தான் அண்ணாமலை.

பாஜக உடன் சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றார்கள். இப்போது சிறுபான்மை வாக்குகளை அள்ளிக் குவித்து விட்டார்களா? மிச்சம் மீதி இருப்பதும் இனி விஜய்க்கு போகுமே தவிர அதிமுகவுக்கு வராது. இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+