எதுவுமே சரியில்லையே.. இவங்க கூட இருக்கணுமா? கர்நாடகாவில் பாஜக படுதோல்வி.. பட்டென யோசிக்கும் அதிமுக?
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் படுதோல்வி தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக தோல்வி:
பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் படுதோல்வி தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கட்சியினரே பாஜகவிற்கு ஆதரவு குறைந்து வருகிறதா.. முக்கியமாக தென்னிந்தியாவில் பாஜகவிற்கான ஆதரவு குறைந்து வருகிறதோ என்று யோசிக்க தொடங்கி உள்ளதாம்.
சமீபத்தில்தான் டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். ஆனாலும் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்று அதிமுகவின் டாப் தலைகள் தற்போது யோசிக்க தொடங்கி இருக்கிறார்களாம்.
இதற்கு காரணம் இல்லாமல்.. கர்நாடகாவில் பாஜக மிக தீவிர பிரச்சாரங்களை செய்தும் தோல்வி அடைந்து உள்ளது. உதாரணமாக
கர்நாடகாவில் மோடி 19 பேரணிகள் மற்றும் 6 ரோட்ஷோக்கள், அமித்ஷா 16 பேரணிகள் மற்றும் 15 ரோட்ஷோக்கள், ஜேபி நட்டா 10 பேரணிகள் மற்றும் 16 ரோட்ஷோக்கள், ஸ்மிருதி இரானி 17 பேரணிகள் மற்றும் 2 ரோட்ஷோக்கள், பிஷ்த் 9 பேரணிகள் மற்றும் 35 பேரணிகளில் கலந்து கொண்டனர். பேரணிகள் மற்றும் ரோட்ஷோ பாஜக மூலம் அடுத்தடுத்து நடத்தப்பட்டது.
அங்கே ஹிஜாப் விவகாரம், ஹலால் உணவு விவகாரம், கேரளா ஸ்டோரி, பஜ்ரங் பாலி விவகாரம், சிவில் கோட் சட்டம், லவ் ஜிஹாத் விவகாரம் என கிட்டத்தட்ட பாஜக அனைத்து விதமான பார்முலாக்களையும் பயன்படுத்தியும் கூடமே 30 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உள்ளனர்.
கர்நாடகா போன்ற பாஜக ஆதரவு கொள்கை கொண்ட மாநிலத்திலேயே அந்த கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வெல்லுமா , அவர்களுடன் கூட்டணியில் இருப்பது சரியா என்று அதிமுக டாப் நிர்வாகிகள் யோசிக்க தொடங்கி உள்ளனராம்.
அண்ணாமலை:
முக்கியமாக அண்ணாமலை தலைமையும் அதிமுகவை திடீரென யோசிக்க வைத்துள்ளதாம். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றிய தொகுதிகளில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அங்கே இருக்கும் கர்நாடக அரசியல் தலைவர்கள்.., அதாவது எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அரசியல் ரீதியாக அண்ணாமலை இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்த தேர்தலில்தான் அவர் தனது பலத்தை நிரூபிக்க முடியும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு பணிகளை செய்தார். வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை முடிவு செய்தது உட்பட பல விஷயங்களில் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுத்தார்.
தேர்தலில் பணிகளை செய்வதற்காக கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இது எல்லாம் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.
உடுப்பி- சிக்கமகளூரு 8 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள், என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் பாஜக பல பகுதிகளில் மோசமாக அடி வாங்கி உள்ளது.
தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 5ல் வென்றுள்ளது. சுயேட்ச் ஒரு இடத்தில் வென்றுள்ளது.உடுப்பி - சிக்கமகளூரில் - 4ல் பாஜக வென்றதுள்ளது. 4ல் காங்கிரஸ் வென்றுள்ளது.ஷிவமொகா 7 தொகுதிகள்- 1ல் பாஜக வென்றதுள்ளது. 6ல் காங்கிரஸ் வென்றுள்ளது.
கோலார் 8 தொகுதிகள்- 5ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 3ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.மாண்டியா 7 தொகுதிகள் - 6ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 1 ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.ஹாசன் 7 தொகுதிகள்- 4ல் பாஜக வென்றதுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 2ல் மஜத
தட்சிண கன்னடா 8 தொகுதிகள்- 6ல் பாஜக வென்றுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. பெங்களூரில் 28 தொகுதிகள்- 14ல் பாஜக வென்றுள்ளது. 13ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 1ல் ,மஜத வென்றுள்ளது. உத்தர கன்னடா 6 தொகுதிகள் - 3ல் பாஜக வென்றுள்ளது. 5ல் காங்கிரஸ் வென்றுள்ளது.
அண்ணாமலை வேலை பார்த்த இடங்களில் பாஜக பெங்களூர், தட்சிண கன்னடா, ஹாசன் தவிர மற்ற இடங்களில் கடும் சரிவை பாஜக சந்தித்து உள்ளது.
கர்நாடகாவில் அண்ணாமலையின் சரிவு, பாஜகவின் சரிவு இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி இருக்க வேண்டுமா என்று அதிமுகவின் டாப் தலைகளை யோசிக்க வைத்துள்ளதாம்.
-
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications