"அவசரப்பட்டியே குமாரு".. எடப்பாடிக்கு சீனியர்கள் தந்த வார்னிங்.. ரகசிய தொடர்பா! கோபத்தில் அமித் ஷா?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஏன்? இந்த சந்திப்பிற்கு யார் காரணம்? இந்த சந்திப்பில் என்ன நடந்தது? ஆளுநர் ஆர். என் ரவி சொன்னது என்ன? அதற்கு எடப்பாடி சொன்ன பதில் என்ன? என்பது தொடர்பாக கேள்விகளுக்கு எல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் 7 பேருடன் ஆளுநர் ரவியை அண்மையில் சந்தித்தார் எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி. டெல்லிக்கு திடீர் பயணமாக ஆளுநர் சென்று வந்ததன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றார்.
அதன்பின் திங்கள் கிழமை ஆர். என் ரவி திரும்பி வந்த நிலையில் புதன் கிழமையே நேரம் வாங்கி எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்களுடன் சென்று எடப்பாடி இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார்.

மீட்டிங்
12.45க்கு பிற்பகல் தொடங்கிய மீட்டிங் 1.10 வரை நடந்தது. திமுக அரசுக்கு எதிரான புகார்களை ஆளுநரிடம் கொடுப்பதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்று எடப்பாடி சொல்லியிருந்தாலும் சந்திப்புக்கான காரணம் வேறு என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுக தலைவர்கள். இதுகுறித்து அதிமுக சீனியர்களிடம் நாம் விசாரித்தபோது, ''தமிழகத்துக்கு அமித் ஷா வரும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை''என்று ஒரு வித திமிர் தனமாக சொல்லியிருந்தார் எடப்பாடி. அமித் ஷாவை எடப்பாடி சென்று சந்திக்கவில்லை. அது கூட பிரச்சனை இல்லை. ஆனால் எடப்பாடி அமித் ஷாவை பற்றி இப்படி பேசி இருக்க கூடாது. இதனால் பெரிய சிக்கல்கள் வரலாம்.

பாஜக தலைவர்கள்
இது, தமிழக பாஜக தலைவர்களிடம் மட்டுமல்ல, எங்களைப் போன்ற அதிமுக தலைவர்களுக்கும் சங்கடத்தைக் கொடுத்தது என்பதுதான் உண்மை. அதாவது, பாஜகவுக்கு எதிராக இருக்கும் அதிமுக தலைவர்கள் கூட எடப்பாடியின் அந்த பேச்சை ரசிக்கவில்லை. இதுகுறித்து எடப்பாடியிடமே நாங்கள் சொல்லியிருக்கிறோம். அப்போதுதான் தனது பேச்சு, ஒரு வித அதிகார தொணியில் இருந்திருப்பதை
உணர்ந்தார் எடப்பாடி . மேலும், எடப்பாடியின் அந்த பேச்சை அமித் ஷா அலட்சியப்படுத்தியிருந்தாலும் கூட, பாஜக தலைமை இதனை மனதிலேயே வைத்திருக்கும். அதன் ரியாக்சன் தேவைப்படுகிற சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக வேலை செய்யும் என்பதையும் எடப்பாடிக்கு சீனியர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

எடப்பாடி
இதையெல்லாம் உணந்த எடப்பாடி, அமித் ஷாவிடம் வருத்தம் தெரிவிக்க விரும்பியிருக்கிறார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த சமயத்தில் தான், டெல்லிக்கு ஆளுநர் செல்கிறார் என்கிற தகவல் எடப்பாடிக்கு வர , அவரை தொடர்பு கொண்டு, அமித் ஷாவிடம் ஸாரி கேட்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவரிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. டெல்லிக்கு சென்று சென்னை திரும்பிய ஆளுநர் ரவி, உங்கள் கட்சி சீனியர்களுடன் வந்து என்ன சந்தியுங்கள் என எடப்பாடிக்கு தகவல் தந்தார். ஆளுநரை சந்திக்க ஒரு காரணம் வேண்டுமல்லவா... அதற்காகத்தான் திமுகவுக்கு எதிராக புகார் மனு கொடுத்ததாக வெளிப்படுத்தினார் எடப்பாடி.
இந்த பின்னணியோடு நடந்த அந்த சந்திப்பில்,

டெல்லி கடுமை
உங்களுக்கு (எடப்பாடி) எதிராக டெல்லி கடுமையான கோபத்தில் இருக்கிறது. நீங்கள் பேசுவதை கூட விடுங்கள். நீங்கள் செய்த வேறு சில விஷயங்கள்தான் கோபத்திற்கு காரணம். குறிப்பாக, திமுகவை வீழ்த்த
வேண்டும் என்கிற நோக்கம் உங்களிடம் இல்லை. அப்படி நோக்கம் இருந்திருந்தால் அதிமுகவில் ஒற்றுமையை கொண்டுவந்திருப்பீர்கள். அதிமுகவில் ஒற்றுமை இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும்னு டெல்லி நினைக்கிறது. ஆனா, உங்கள் பிடிவாதம் டெல்லியின் திட்டத்துக்கு எதிராக இருக்கிறது. அதனால், திமுக தலைமையோடு உங்களுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக டெல்லி சந்தேகிக்கிறது.

ஒற்றுமை
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தல் காலத்தில் அனைத்தும் சரியாக நடக்கும். இல்லையெனில், உங்களுக்கு எதிராக பல விசயங்கள் நடக்கும். உங்களுக்கு எதிராக பாஜக திரும்ப நீண்ட நாட்கள் ஆகாது. இதனை அதிமுகவில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் உங்கள் அனைவரிடமும் சொல்வதற்காகத்தான் சீனியர்களை அழைத்து வாருங்கள் என சொன்னேன். உங்களுக்கு முன் எல்லோரிடம் சொல்லிவிடுகிறேன். திமுகவை எதிர்ப்பதுதான் ஒரே குறிக்கோள். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

பார்த்துக்கலாம்
அதனால், உங்களின் ஸாரி என்கிற வார்த்தையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அதிமுக எப்படி இருக்க வேண்டும் என டெல்லி நினைக்கிறதோ அதை செயல்படுத்தப் பாருங்கள். இந்த விசயத்தில் யோசித்து ஒரு முடிவை நீங்கள் சொல்லுங்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இல்லை என்று நீங்கள் நினைத்தால் எண்களின் முடிவும் அதற்கு ஏற்றபடி இருக்கும். நீங்கள் எடுக்கவிருக்கும் முடிவை பொறுத்து டெல்லியின் ஆக்ஷன் இருக்கும் என ஆளூநர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்'' என்று சந்திப்பில் நடந்ததை விவரிக்கின்றனர் அதிமுக தலைவர்கள். டெல்லியின் எதிர்பார்ப்பை நாசுக்காக எடப்பாடிக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ஆளுநர் ரவி. எடப்பாடியும் அதிமுக சீனியர்களும் எடுக்கப்போகும் முடிவை பொறுத்தே, டெல்லியின் திட்டம் அரங்கேறும். அது, எடப்பாடிக்கு சாதகமாக இருக்குமா? எதிராக இருக்குமா? என்பது எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் முடிவில் இருக்கிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications