அதிமுக கூட்டணி.. “கண்டிஷன்” போட்ட அண்ணாமலை! டெல்லி தலைமைக்கே “பிரஷர்” கொடுப்பதா? வந்து விழும் கேள்வி
அதிமுகவுடனான கூட்டணியை அமைக்க ஜெயலலிதா மறைவுக்கு பிறகிலிருந்து பாஜக தலைமை முடிவு செய்து இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அப்போதே பேசப்பட்டது.
சென்னை: அதிமுகவுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்ந்தால் தனது பதவியை விட்டே ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று அண்ணாமலை அறிவித்தது, பாஜக தேசிய தலைமைக்கே விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் கடந்த சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இருக்கும், பாஜகவை ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமாரின் கட்சித் தாவல் இந்த விரிசலை மேலும் பெரிதாக்கியது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பாஜகவிலிருந்து விலகியவுடன் அவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

அதிமுக பாஜக மோதல்
அதன் தொடர்ச்சியாக பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து வெளியேறி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இரு கட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சரிமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டதுடன், அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களும் எரிக்கப்பட்டன.

பாஜக கூட்டம்
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், "தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை வளர்க்க முடியும். பாஜகவை நான் தனியாக வளர்த்து எடுக்க பாடுபட்டு வருகிறேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அதிமுக கூட்டணி வேண்டாம்
நான் ஒன்றும் பாஜகவின் மேனேஜர் இல்லை. நான் கட்சியின் மாநில தலைவர் என்றுதான் சொல்கிறேன். வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், நான் வகித்து வகும் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன்.

கிளம்பிய சலசலப்பு
தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து உள்ளேன். என்னால் எனது வழியில் செயல்பட முடியாதபோது நான் கட்சியில் வகிக்கும் பதவியில் இருந்தே ராஜினாமா செய்து விடுகிறேன்." என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சால் பாஜகவிற்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு சலசலப்புகள் கிளம்பி இருக்கின்றன.

தேசிய தலைமைக்கே அழுத்தம்
இந்த நிலையில், அதிமுக கூட்டணியை கைவிட வேண்டும் என்று பாஜக தேசிய தலைமைக்கே அண்ணாமலை அழுத்தம் கொடுக்கிறாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள். காரணம், அதிமுகவுடனான கூட்டணியை அமைக்க ஜெயலலிதா மறைவுக்கு பிறகிலிருந்து பாஜக தலைமை முடிவு செய்து இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அப்போதே பேசப்பட்டது.

5 ஆண்டுகால கூட்டணி
அன்றிலிருந்தே இரு கட்சிகளுக்கு மத்தியில் இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவராக இருந்தபோது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. எல்.முருகன் தலைவராக இருந்தபோதும் 2021 சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தது. ஆனால், அண்ணாமலை தலைவரான பிறகு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.

வந்து விழும் கேள்விகள்
ஈரோடு கிழக்கில் அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது, அவர் கூட்டணியையே கைவிட வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில்தான் பத்திரிகையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன், அண்ணாமலை பேச்சை சுட்டிக்காட்டி, "அவர் தேசிய தலைமையையே அச்சுறுத்துகிறாரா? இப்படி பேசினால் செய்தி வெளியில் கசியும் என தெரியாதா? அல்லது அவரது தரப்பினர் வேண்டுமென்றே கசிய விட்டார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications