கன்னடிகா அண்ணாமலையின் பெங்களூர் பாசமும், ஓசூர் வெறுப்பும்! திமுக ரிலீஸ் செய்த லிஸ்ட்! கவனிச்சீங்களா?
சென்னை; ஓசூர் விமான நிலையம் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு திமுக கடும் விமர்சனம் வைத்துள்ளது. Proud கன்னடிகாவின் பெங்களூர் பாசமும், ஒசூர் வெறுப்பும் என்று திமுக கடும் விமர்சனம் வைத்துள்ளது.
ஓசூரில் உருவாக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு பெங்களூர் முட்டுக்கட்டை போடும் என்று தகவல்கள் வருகின்றன. இதை கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் விமான நிலையமான BAIL பெங்களூரை சுற்றி ஏர்போர்ட் அமைக்க ஓசி.. அதாவது தடை சான்றிதழ் வாங்கி உள்ளது. அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் மத்திய அரசு பெங்களூரை சுற்றி புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு கொடுக்காது. இதை பயன்படுத்தி ஓசூரில் விமான நிலையம் அமைக்க பெங்களூர் எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த விவகாரம் கணம் பெற்றுள்ளது.
அண்ணாமலை விமர்சனம்: ஓசூர் விமான நிலையம் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு திமுக கடும் விமர்சனம் வைத்துள்ளது. அண்ணாமலை வைத்த விமர்சனத்தில் , ஓசூரில் விமான நிலையம் அமைப்பது நிறைவேற்ற சாத்தியம் இல்லாத வாக்குறுதி. தமிழக அரசு புதிய பேருந்துகளை கூட வாங்குவது இல்லை. புதிய பேருந்துகளை வாங்க வக்கில்லாத தமிழக அரசுதான் விமான நிலையம் கட்ட போகிறதா?
இரண்டு ஆண்டுகளில் பஸ்களைக் கூட வாங்காத திமுக விமான நிலையம் கட்டுவது கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவை. நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று ஓசூர் விமான நிலையத்திற்கு எதிராக அண்ணாமலை பேசினார் .
திமுக பதிலடி: இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அளித்த பதிலில், Proud கன்னடிகாவின் பெங்களூர் பாசமும், ஒசூர் வெறுப்பும்.

தான் ஆதாரமாக கொடுக்கும் ஆவணத்தையே ஒழுங்காக படிக்காதவர் அண்ணாமலை.
1) ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று, பெங்களூர் விமான நிலையத்தை காரணம் காட்டி, ஒசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்றார் அண்ணாமலை.
2) டெல்லி விமான நிலையத்திற்கும், உத்திரபிரதேசம் நொய்டாவில் அமைக்கப்படும் விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் 80+ கி.மீ தானே. அங்கு அனுமதி அளிக்கப்படும்போது, இங்கு மட்டும் ஏன் முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே, பெங்களூர் விமான நிலையமும் (BIAL) ஒன்றிய அரசும் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 150 கி.மீ சுற்றளவில், 25 ஆண்டுகளுக்கு புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று புதிய விளக்கம் சொன்னார் அண்ணாமலை.
3) 2004 ஆம் ஆண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம், வணிக நோக்கத்துடன் ஒரு தனியார் முகமையுடன் போடப்பட்டது. தனிப்பட்ட அமைப்பின் வணிக நலனுக்காக, மாநிலத்தின் நலன் மற்றும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.
அந்த ஒப்பந்தத்திலேயே மைசூரு & ஹசன் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநில விமான நிலையங்களுக்கே தடை இல்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்படும் திட்டத்தை, ஒரு தனியார் முகமையுடனான ஒப்பந்தத்தை காரணம் காட்டி தடுக்க முடியாது என திமுக எம்.பி திரு வில்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
3) தற்போது BIAL ஒப்பந்தம் மட்டுமல்ல, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறை அடிப்படையிலும், 150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று மீண்டும் ஒரு விளக்கம் அளிக்கிறார் அண்ணாமலை.
அதற்கு அவர் ஒரு ஆவணத்தை ஆதாரமாக கொடுக்கிறார். (Guidelines for Setting up of Greenfield Airports)
அதில் 8.1(a) 150 கிமீ சுற்றளவில் புதிய விமான நிலையம் அமைக்க தடை விதிக்கிறது.
ஆனால் 8.1(b) 150 கிமீ சுற்றளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டம் முன்வைக்கப்பட்டால், அரசு குறிப்பிட்ட திட்டத்தை ஆய்வு செய்து முடிவெடுக்கலாம் என்கிறது.
அவர் கொடுத்த ஆதாரத்தை படித்தாலே, அவர் சொல்வது பொய் என்பது விளங்கும்.
4) ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தமோ, வழிகாட்டி நெறிமுறையோ தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் ஒன்றுக்கு தடையாக இருக்குமானால், தேவை கருதி அதனை திருத்தி அமைக்க வேண்டும். மாறாக திட்டத்தை எதிர்ப்பது தமிழ்நாட்டின் மீதான வெறுப்பை தான் காட்டுகிறது.
பெருமைமிகு கன்னடருக்கு, கர்நாடகா - பெங்களூர் விமான நிலையத்திற்காக, தமிழ்நாடு - ஒசூர் விமான நிலையம் மீது வெறுப்பு வருவது தவிர்க்க முடியாதது தான்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒரு நாளும் சங்கிகள் அனுமதிக்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள், என்று திமுக பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications