அமித்ஷா, கட்காரி சொத்து பட்டியலை வெளியிடுவாரா அண்ணாமலை? திமுகவுக்கு சப்போர்ட்டாக இறங்கிய அன்சாரி!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவைச் சேர்ந்த நபர்களின் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டுள்ளது போல் பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா, நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட தயாரா? என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று தனது ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். திமுகவினரின் ஊழல் பட்டியல் பாகம் ஒன்றோடு முடியப் போவதில்லை, தமிழ்நாட்டில் எந்தக் கட்சியெல்லாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வரப்போகிறேன் என்றும் தெரிவித்தார் அண்ணாமலை.

அனைத்தையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவேன். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் அனைவரையும் மொத்தமாக எதிர்ப்போம். எதிர்க்கக்கூடாது என்றால் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டு வாருங்கள். இந்த அண்ணாமலை இருக்கும் வரை ஊழலை எதிர்ப்பான் என ஆவேசமாகப் பேசினார் அண்ணாமலை.
திமுகவின் சொத்துப் பட்டியல் என முதற்கட்டமாக ஒரு பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வருவோம் எனப் பேசியிருப்பதால், கூட்டணி கட்சியான அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம், அவர் சார்ந்துள்ள பாஜக மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதும் எதிர் தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, "திமுகவைச் சேர்ந்த நபர்களின் சொத்து பட்டியல் என்ற ஒன்றினை இன்று வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவாரா? குறிப்பாக அமித் ஷா, நிதின் கட்காரி போன்ற தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட முடியுமா? அண்ணாமலை தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியில் நின்று போட்டியிட வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் வாடும் நபர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications