பாஜக அதிமுக கூட்டணி முறிவால் ‘லாபம்’ யாருக்கு?.. தேர்தல் ஹிஸ்டரி சொல்வது என்ன? ஃபுல் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது. இதுவரை 4 பொதுத் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணியாக இணைந்து போட்டியிட்டுள்ளனர். இந்த கூட்டணியின் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்டை பார்க்கலாம்..

1998 லோக்சபா தேர்தல்: முதன் முதலாக, 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது அதிமுக. அப்போது அதிமுக 23 இடங்களிலும், கூட்டணியில் பாஜக 5 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக 18 இடங்களில் வென்றது. பாஜக 3 இடங்களை வென்றது. நீலகிரியில் மாஸ்டர் மதன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Is BJP AIADMK Coalition a winning alliance? : What the performance report says

2004 லோக்சபா தேர்தல்: 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்த நிலையில் வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களிலும், கூட்டணியில் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் அனைத்து தொகுதிகளையும் இழந்தது அதிமுக - பாஜக கூட்டணி.

2019 லோக்சபா தேர்தல்: 2019 லோக்சபா தேர்தலில் திமுக வலுவான கூட்டணியுடன் களமிறங்க, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்தது. இந்த தேர்தலில் அதிமுக 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது. பாஜக அனைத்து இடங்களிலும் தோற்றது.

2021 சட்டமன்றத் தேர்தல்: 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தது. அதிமுக 179 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் அதிமுக 66 இடங்களில் வென்றது. ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியானது. பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2001-2006 காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் காலெடுத்து வைத்தது பாஜக.

வின்னிங் ரிப்போர்ட்: ஆக, கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை 4 பொதுத் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இதில், ஒரு தேர்தலில் மட்டுமே பெரும்பான்மையான இடங்களைப் (18+3) பிடித்துள்ளது இந்தக் கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற 3 பொதுத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணிக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது.

அதிமுக தனித்து நின்று: அதேசமயம், அதிமுக பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட 2001 சட்டமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிக இடங்களில் வென்றுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே அதிமுக தோல்வியடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இன்னும் தேர்தலுக்கு பல மாதங்கள் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால், இதுவரையிலான இந்த கூட்டணி 4ல் 1 முறை மட்டுமே வென்றுள்ளது. இப்போது பாஜக உடனான கூட்டணியை முறிப்பதாக அதிமுக முடிவெடுத்துள்ளதை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கூட்டணி முறிவு: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து அதிமுகவினரிடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறிக்க பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதற்கு அண்ணாமலை மீண்டும் பதிலடி கொடுத்தார். அதிமுக முன்னாள் மந்திரிகளை காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை இன்று அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் முடிவு 2024ல் அக்கட்சிக்கு பலன் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+