பாஜக - அதிமுக கூட்டணி ரெடி.. டெல்லியில் முடிவு? ஆனால் முதல்வர் வேட்பாளர் வேற ஆள்? அப்போ எடப்பாடி?
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி வைக்கும். என்டிஏ மீண்டும் உருவாகும். அப்படி உருவானால்.. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வர் வேட்பாளர் ஆகவில்லை. அப்படித்தான் இங்கே நடக்கும். 117 இடங்களில் பாஜக போட்டியிடும். அதாவது பாதிக்கு பாதி இடங்களில் பாஜக போட்டியிடும். மீதி இடங்களில் அதிமுக போட்டியிடும், என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்டி
இவர்களுக்கு இடையே அமைய உள்ள கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில். பாஜக - அதிமுக கூட்டணி வைக்கும். என்டிஏ மீண்டும் உருவாகும். அப்படி உருவானால்.. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வர் வேட்பாளர் ஆகவில்லை. அப்படித்தான் இங்கே நடக்கும். 117 இடங்களில் பாஜக போட்டியிடும். அதாவது பாதிக்கு பாதி இடங்களில் பாஜக போட்டியிடும். மீதி இடங்களில் அதிமுக போட்டியிடும்.
இதை எப்படி எடப்பாடி ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இங்கே பிரச்சனையே இல்லை. எடப்பாடி இதில் முடிவு எடுக்கவே முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால்.. முடிவு எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். இதில் விஜய்யை உள்ளே கொண்டு வர திட்டம் உள்ளது.
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர திட்டம் உள்ளது. பலரும் சீமானை உள்ளே கொண்டு வர திட்டம் உள்ளது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. விஜயை கொண்டு வர திட்டம் உள்ளது. அதற்கான நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. இப்போது ஊழல் வைத்து திமுகவை எதிர்க்கிறார்கள். விஜய் - எடப்பாடி - பாஜக என்று எல்லோரும் திமுகவின் டாஸ்மாக் மேட்டரை எடுத்து பேசி வருகின்றனர். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட மூவ்கள்.
திமுகவுக்கு ஒன்றாக இவர்கள் பிரஷர் கொடுக்கிறார்கள். இந்த ஸ்டைலை வைத்தே சொல்லலாம் இவர்கள் கூட்டணிக்கான திட்டமிடல், என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications