Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆருக்கு வலை விரிக்கும் பாஜக.. தமிழ்நாட்டில் மோடியின் ஸ்கெட்ச்.. சீக்ரெட்டை போட்டு உடைத்த புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிடிஆரை பாஜக பெரிதாக இப்போது விமர்சிப்பது இல்லை. பிடிஆரை இழுக்க பாஜக முயற்சி செய்யலாம். அவரை இழுக்க பார்க்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மதுரையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது தொடர்பாக தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தீர்களா என நிருபர் கேட்டதற்கு பிரதமர் எப்போதெல்லாம் ஒரு இடத்திற்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் புரோட்டோக்கால் அடிப்படையில் மரியாதை செலுத்தும் வகையில் வரவேற்கவும் உதவி செய்வதும் அந்த மாநில அரசுடைய கடமை

Is BJP planning to take PTR Palanivel Thiagarajan into the party What is happening

முதல்வர் ஸ்டாலின் அனுமதியின் பெயரில், அவர் சொல்லித்தான் போய் சந்தித்தேன். இதில் அரசியல் எல்லாம் இல்லை, என்று பிடிஆர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் பிடிஆரை பாஜக பெரிதாக இப்போது விமர்சிப்பது இல்லை. பிடிஆரை இழுக்க பாஜக முயற்சி செய்யலாம். அவரை இழுக்க பார்க்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.

பேட்டி: ஒன்இந்தியாவிற்கு பா.கி அளித்த பேட்டியில், கருத்து கணிப்புகள் ரேண்டமாக எடுக்க கூடிய கருத்து கணிப்புகள். தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் இந்த கணிப்புகள் மாறலாம். அது அந்தந்த நேரத்தில் மாறக்கூடிய கணிப்புகள். ஒரு தொகுதியில் உள்ள 5 லட்சம் பேரையும் நீங்கள் எடுக்க போவது இல்லை. இதனால் கணிப்புகளில் முடிவுகள் எப்படி வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கருத்து கணிப்பு முடிவுகள் மொத்தமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

இப்போது இப்படி கருத்து சொல்லும் மக்கள் நாளை வேறு சொல்லலாம். தேர்தலுக்கு முன் அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். அண்ணாமலை பாஜக தலைவராக வந்த பின் ஆட்சியாளர்களை எதிர்க்கிறார். ஆனால் இந்துத்துவா அரசியல் பேசவில்லை. தேசிய அரசியல் பேசுகிறார். மோடி பற்றி பேசுகிறார்.

ஆனால் அவர் இந்துத்துவா அரசியல் பேசவில்லை. இதுதான் மாநிலத்திற்கு ஏற்றபடி கொள்கைகளை கவனிப்பது. அதோடு அதிமுகவே இந்த தேர்தலில் 2ம் இடம் பிடிக்கும். பாஜக 3ம் இடம்தான் பிடிக்கும். ஆனால் வாக்கு வங்கி உயரும். 14 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை திமுக பெறும். இங்கெல்லாம் அண்ணாமலை சுற்று பயணம் நடத்திய இடங்கள் இது. இங்கெல்லாம் ஏற்கனவே பாஜக வலுவாக இருந்த இடங்கள்.

இப்போது பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை களப்பணிகளை செய்து இருக்கிறார்.

மோடியை பிடிஆர் சந்தித்தது பெரிய விஷயம் இல்லை. திமுகவிற்குள் மனசஞ்சலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று செய்கின்றனர். திமுகவை எப்படியாவது பிடிஆர் வைத்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கின்றனர். அதோடு இது ரகசிய சந்திப்பு இல்லை. பலருக்கும் முன்னிலையில் இப்படி சந்தித்து உள்ளார்.

தெரியாமல் எல்லாம் இப்படி போய் சந்தித்து இருக்க மாட்டார். பிடிஆர் அதிருப்தியில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெறும் சந்தேகம்தான். ஆனால் அதற்காக எல்லாம் பாஜக பக்கம் செல்கிறாரோ என்று சொல்ல முடியாது. ஆனால் பிடிஆரை பாஜக பெரிதாக இப்போது விமர்சிப்பது இல்லை. பிடிஆரை இழுக்க பாஜக முயற்சி செய்யலாம். அவரை இழுக்க பார்க்கலாம். ஆனால இதெல்லாம் வதந்தியா.. உண்மையா என்று தெரியாது, என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+