சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜெட் வேக வளர்ச்சி".. ரங்கசாமியை வைத்து.. விஜய்க்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இது லிஸ்ட்லயே இல்லையே!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மூலம் பாஜக முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்படாத பேச்சு ஒன்று அடிபடுகிறது.

நடிகர் விஜயை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று திடீரென சந்தித்தார். புதுவை சிஎம் ரங்கசாமி பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவரை நேரில் சென்று சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு அதிகம் கவனம் பெறுகிறது.

Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட்Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட்

அரசியல் பேசப்பட்டது

அரசியல் பேசப்பட்டது

இந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அதே சமயம் இதில் பல முக்கியமான அரசியல் தொடர்பான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து சில முக்கிய விஷயங்களை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயிடம் பேசியது கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசத்தான் அவர் விஜய் வீட்டிற்கே சென்றதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

என்ன கூறினார்கள்?

என்ன கூறினார்கள்?

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், பாஜக குறித்தும் சில விஷயங்களை ரங்கசாமி விஜயுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து பாஜகவிற்கு தூது போல ரங்கசாமி விஜயை சந்தித்ததாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் விஜய் இருக்கிறார். இந்த நிலையில் விஜயிடம் பாஜக ரங்கசாமி வழியாக பேச்சுவார்த்தையில் இறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்படாத பேச்சு ஒன்று அடிபடுகிறது.

எதிர்கால திட்டம்?

எதிர்கால திட்டம்?

சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் உட்பட 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளை விட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் மக்கள் இயக்கம் களமிறங்கி உள்ளது.

நன்றாக செயல்பட்டது

நன்றாக செயல்பட்டது

இப்படி விஜயின் மக்கள் இயக்கம் ஜெட் வேகத்தில் வளர்ந்துவரும் நிலையில்தான் பாஜக இந்த தூதை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்கால கூட்டணிகளுக்கான அஸ்திவாரம் இதனால் இப்போதே பாஜக மூலம் போடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது . ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரபலமாக இருக்கும் நபர்களை பாஜக தங்கள் பக்கம் இழுப்பது வழக்கம். கேரளாவில் சுரேஷ் கோபி, மேற்கு வங்கத்தில் மிதுன் சக்ரபோர்த்தி போல பாஜக விஜயை இழுக்க பார்க்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

உதவும்

உதவும்

ஆனால் விஜய்க்கும் பாஜகவிற்கு இதற்கு முந்தைய உறவுகள் சரியாக இருந்தது இல்லை. பாஜக எச் ராஜா விஜய் மீது மத ரீதியான விமர்சனங்களை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. வருமானவரித்துறை ரெய்டு காரணமாக விஜய் - பாஜக இடையே மோதல் போக்கு வெடித்தது. அதோடு மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலில் விஜய் பாஜகவை சீண்டியதாவும், வாக்கு அளிக்க வந்த போது விஜய் வேண்டுமென்றே சைக்கிளில் வந்து பெட்ரோல் டீசல் விலையை விமர்சனம் செய்ததாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு ரங்கசாமி மூலம் பாஜக சமாதான தூது அனுப்புவதாக கூறப்படுகிறது.

ஏன் அதிமுகவை வைத்து பேசவில்லை

ஏன் அதிமுகவை வைத்து பேசவில்லை

அதிமுகவை வைத்தே இப்படி பாஜக இப்படி விஜயிடம் பேசி இருக்கலாம் என்றாலும், நடிகர் விஜய்க்கும் அதிமுகவிற்கும் அவ்வளவு நெருக்கம் இல்லை. முக்கியமாக சர்க்கார் படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிமுகவுடன் விஜய் மோதி இருக்கிறார், இதனால் தற்போது விஜய்க்கு என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி மூலம் பாஜக தூது விட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.. இதெல்லாம் உண்மையா.. இனி விஜய் என்ன செய்வார் என்பது எல்லாம்.. போக போகத்தான் தெரியும்.

English summary
Is BJP sending a message to Actor Vijay through Puducherry CM Rangaswamy? What is happening?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X