இளையராஜா பேசியது இதுக்குத்தானா? சக்சஸ் பிளான்.. திராவிட கட்சிகளின் ரூட்டை பிடித்த பாஜக! பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக முன்பு பயன்படுத்திய அரசியல் ரூட்டை தற்போது பாஜக பயன்படுத்த தொடங்கி உள்ளது. இதற்கான தீவிர முன்னெடுப்புகளை அக்கட்சி எடுத்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தங்களை எப்படியாவது எதிர்க்கட்சியாக முன்னிறுத்த வேண்டும் என்று பாஜக முயன்று வருகிறது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை படி அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பல்வேறு விஷயங்களில் அதிமுக கருத்து கூறாமல் ஒதுங்கி உள்ளது.
ஆனால் பாஜக அப்படி எல்லாம் பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் கருத்து கூறி, தன்னை ஒரு எதிர்க்கட்சியாக முன்னிலைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

பாஜக தமிழ்நாடு
இந்த நிலையில் 90 களில் திமுக பயன்படுத்த அரசியல் ரூட்டை பாஜக களமிறக்கி உள்ளது. 90 களில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பல்வேறு சினிமா பிரபலங்கள் திமுகவின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதற்கு முன்பும் கூட எம்ஜிஆர் (அதிமுக தொடங்கும் வரை), அதன்பின் சிவாஜி தொடங்கி பல்வேறு டாப் பிரபலங்கள் திமுகவை தீவிரமாக ஆதரித்து வந்தனர். அதிமுகவிலும் இதே நிலைதான் இருந்தது.

அதிமுக ஆதரவு
பல டாப் சினிமா நட்சத்திரங்கள் அதிமுகவையும் ஆதரித்து வந்தனர். இப்போதும் கூட இரண்டு கட்சிக்கும் அந்த பழைய சினிமா பிரபலங்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் தற்போதைய நிகழ்கால நட்சத்திரங்கள் பெரிதாக அரசியலில் நேரடியாக ஆதரவுகளை தெரிவிப்பது இல்லை. அதாவது 2010க்கு பின் வந்த பல்வேறு பிரபலங்கள் நேரடியாக அரசியல் ரீதியாக தங்கள் சார்பை தெரிவிப்பது இல்லை.

ஆதரவு இல்லை
அரசியல் கருத்துக்களை நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் தெரிவித்தாலும் கூட இந்த கட்சிக்கு தான் ஆதரவு என்று முன்பு இருந்தது போல சொல்வது இல்லை. இந்த நிலையில் திராவிட கட்சிகளின் இந்த பழைய சினிமா ரூட்டை கையில் எடுத்து பாஜக வியூகம் வகுத்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக பாஜகவிற்கு சினிமா பிரபலங்கள் ஆதரவாக பேசுவது இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஏற்கனவே முன்னாள் நட்சத்திரங்கள் பலரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துவிட்டது.

பாஜக ஆதரவு
குஷ்பு, காயத்திரி, நமீதா, கங்கை அமரன், பேரரசு என்று பல பிரபலங்கள் பாஜகவில் ஐக்கியம் ஆகிவிட்டனர். சமீபத்தில்தான் இளையராஜா பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

இளையராஜா பாராட்டு
அதில், மோடி ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார். அதோடு மோடி பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க மாட்டேன் என்று இளையராஜா குறிப்பிட்டு இருந்தார். அதோடு பேரரசுவும் மோடியை புகழ்ந்து பேசினார். அதில் இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார். ஆனால் அது மட்டும் போதாது. என்னை பொறுத்தவரை இன்னொருவரோடும் ஒப்பிட்டு இருக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரோடு.

பேரரசு
அந்த அளவிற்கு மோடி சிறந்த தலைவர். உண்மையாக முத்துராமலிங்க தேவரோடுதான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும். அவர்தான் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்னார். மோடியும் தேசியத்தோடும் தெய்வீகத்தோடும் இருக்கிறார் என்று பாராட்டி பேசி உள்ளார். இடையில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை பாக்யராஜ் மோசமாக விமர்சனம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த கருத்துக்கு பாக்யராஜ் வருத்தம் தெரிவித்துவிட்டார்.

ஆனால் செல்லுபடியாகுமா?
இந்த தொடர் கருத்துக்களால்.. தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற நினைத்துக்கொண்டு இருக்கும் பாஜக சினிமா பிரபலங்கள் மூலம் எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலம் அடையலாம் என்று எதிர்பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திராவிட கட்சிகளின் ரூட்டை பாஜக பிடிக்கிறதோ என்ற கேள்வி எழாமல் இல்லை. வரிசையாக சினிமா பிரபலங்கள் பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

திமுக அதிமுக
அதிலும் இளையராஜா போன்ற வெகுஜன கலைஞர்கள் நேரடியாக மோடியை ஆதரிப்பது பாஜகவிற்கு மிகப்பெரிய அளவில் பயனை கொடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்தால் அரசியலில் வெல்லலாம் என்ற கருத்து இருந்தது.. அதனால் பாஜக இப்படி சினிமா பிரபலங்களை கையாள்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் இந்த புதிய வியூகத்தை திமுக, அதிமுகவும் கவனித்துக்கொண்டுதான் இருக்கும்.

ரஜினிகாந்த்
ஆனால் விஜயகாந்த் என்ற சினிமா பிரபலம் தமிழ்நாடு அரசியலில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து, அதே வேகத்தில் சரிந்து விட்டார். சரத்குமாரால் பெரிய வெற்றியை அரசியலில் அடைய முடியவில்லை. கமல்ஹாசனும் இப்போதுதான் கட்சியை வளர்த்து வருகிறார். ரஜினிகாந்தால் அரசியலுக்கு உள்ளே கூட நுழைய முடியவில்லை. இந்த நிலையில்தான் கோலிவுட் பிரபலங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் இந்த கோலிவுட் அரசியல் இந்த 2கே காலத்தில் எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications