பராசக்தி டிரெய்லரை ஹிட் அடிக்க Bot Views? இணையதளங்களில் பரவும் வீடியோ! பகிரும் விஜய் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‛பராசக்தி'. தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்நிலையில் தான் டிரெய்லரை ஹிட் அடிக்க வைக்க Bot views செய்யப்பட்டுள்ளதாக வீடியோ வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் சிவகார்த்தியேன், ரவி மோகன், அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛பராசக்தி'. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மறைந்த முதல்வர் அண்ணா கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார்.

is-bot-views-used-to-make-the-parasakthi-trailer-a-hit-video-goes-viral-on-internet

இந்த திரைப்படம் தமிழகத்தில் 1964ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் உள்ளது. இந்நிலையில் தான் நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி டிரெய்லர் மொத்தம் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதாவது 2.5 கோடி பேர் பார்த்துள்ளனர். ஆனால் லைக்ஸ் என்பது 246K என்ற அளவில் தான் உள்ளது. இது 2.5 கோடி பேரின் பார்வையை ஒப்பிடும்போது குறைவாகும்.

இதனால் தான் Bot முறையில் Views அதிகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன்மூலம் Views எண்ணிக்கையை அதிகரிக்க எளிதாக அதிகரிக்க முடியும்.‛பராசக்தி' திரைப்படத்தின் டிரெய்லரை, நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்பட டிரெய்லருக்கு போட்டியாக அதிகமான பார்வையாளர்களை பெற Bot முறை பின்பற்றப்பட்டுள்ளதாக இணையதளங்களில் விஜய் ரசிகர்கள், தவெகவினர் வீடியோக்களை பரப்பி வருகின்றன.

தற்போது பொங்கலுக்கு நடிகர மற்றும் தவெக தலைவர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' வரும் 9 ம்தேதி ரிலீசாக உள்ளது. அதன்பிறகு அடுத்த நாளே ‛பராசக்தி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை Dawn நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகம் செய்கிறது. அதுமட்டுமின்றி இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது திமுக முன்னெடுத்த பேராட்டமாகும்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயின் ஜனநாயகனில் அரசியல் சார்ந்த வசனங்கள் உள்ளது. அதேபோல் ‛பராசக்தி' திரைப்படத்தின் வழியாக திமுகவும் தனது கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் வகையில் உள்ளது. இதனால் ‛ஜனநாயகன்', ‛பராசக்தி' என 2 திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதோடு இணையதளங்களில் தொடர்ந்து விவாதத்தை கிளப்பி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+