பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் மிக முக்கியப் பெருநகரங்கள் பெங்களூர், ஹைதராபாத் தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பழைய விமான நிலையைத்து விட்டுவிட்டு பிரம்மாண்டமான புதிய விமான நிலையங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால் சென்னை மட்டும் வெறும் 1,283 ஏக்கருடன் முடங்கியுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட 'பரந்தூர் விமான நிலையத் திட்டம்' தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Chennai vs Bengaluru vs Hyderabad airport size comparison Parandur airport project dropped by CM Vijay Kempegowda airport T2 expansion vs Chennai airport Rajiv Gandhi international airport Hyderabad total acreage Navi Mumbai international airport construction updates Chennai Meenambakkam airport passenger capacity saturation Tamil Nadu 1 trillion dollar economy vision mega greenfield airport infrastructure India global MNC investments in South India alternative location for Chennai second airport

2வது விமான நிலையம் ரொம்ப முக்கியம்

இந்தியாவின் பிற முக்கியப் பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையின் தற்போதைய நிலை என்ன, பரந்தூர் திட்டம் ஏன் தமிழகத்தின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது?

இந்தியாவின் முக்கியப் பெருநகரங்கள் தங்களின் பழைய, நெரிசல் மிகுந்த விமான நிலையங்களுக்கு மாற்றாகப் புதிய விமான நிலையங்களை அமைத்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. இந்த மாடல் வெற்றியும் கண்டுள்ளது.

ஹைதராபாத்

உதாரணமாக தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் முன்பு வெறும் 700 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பழைய விமான நிலையம் இருந்தது. ஆனால், எதிர்காலத் தேவையைக் கணித்து அங்கு 5,500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (Rajiv Gandhi International Airport) உருவாக்கப்பட்டு தடையின்றிச் செயல்பட்டு வருகிறது.

மும்பை

இதேபோல், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் தற்போதைய விமான நிலையம் 1,500 ஏக்கரில் மட்டுமே உள்ளதால், அங்கு நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4,320 ஏக்கர் பரப்பளவில் 'நவி மும்பை சர்வதேச விமான நிலையம்' (Navi Mumbai International Airport) தற்போது அசுர வேகத்தில் கட்டப்பட்டு உல்ளது.

பெங்களூர்

ஐடி துறையின் மையமாக விளங்கும் கர்நாடகாவின் பெங்களூரு நகரில், முன்பு 865 ஏக்கர் கொண்ட 'எச்.ஏ.எல்' (HAL) விமான நிலையம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 4,000 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான 'கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்' (Kempegowda Airport) அமைக்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கு தற்போது T2 டெர்மினலும் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள 'இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்' (Indira Gandhi International Airport) மட்டுமே ஒரேயொரு விமான நிலையம் கொண்டு இயங்குகிறது. ஆனால் இந்த தனி விமான நிலையமே 5,106 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது.

Is Chennai Falling Behind Bengaluru amp amp Hyderabad Why Dropping the Parandur Airport Plan Could Set Tamil Nadu Back by 20 Years

சென்னையின் தற்போதைய நெருக்கடி

பிற மாநிலங்களின் பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் சென்னையின் தற்போதைய அவலநிலை நமக்குத் தெளிவாகப் புரிகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் வெறும் 1,283 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அமைந்துள்ளது.

20 ஆண்டுகாலப் பின்னடைவு

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, விவசாய நிலங்களைப் பாதுகாக்க பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை நிறுத்திவிட்டு, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப் புதிய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

சாமானிய எளிய மக்களின் விவசாய நிலங்களைப் பாதுகாப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இந்த மெகா விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவது சென்னையை உள்கட்டமைப்பில் அடுத்த 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு சர்வதேச விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல, அது உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களையும் (MNCs) பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளையும் ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட பொருளாதார நுழைவாயிலாகும்.

சென்னைக்கு 2வது விமான நிலையம் அமையாமல் போனால், மிகப்பெரிய வளர்ச்சி வாய்பை பெங்களூரு அல்லது ஹைதராபாத் கைப்பற்றிவிடும்.

பெங்களூரு, ஹைதராபாத்

அண்டை மாநிலங்கள் அனைத்தும் 4,000 முதல் 5,500 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் வான்வழி உள்கட்டமைப்பைத் தயார் செய்து முதலீட்டாளர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் போது, சென்னை வெறும் 1,283 ஏக்கர் விமான நிலையத்துடன் மட்டுமே முடங்கிப் போனால், அடுத்த இரண்டு தசாப்த காலத்திற்கான உலகளாவிய முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குத் தடையின்றிச் சென்றுவிடும்.

எனவே, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், சென்னையின் 2வது விமான நிலையத் திட்டத்திற்கு மாற்று இடத்தையாவது கண்டறிந்து செயல்படுத்துவதே தமிழகத்தின் எதிர்காலத் தொழில் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+