உதயநிதிக்கு ப்ரோமோஷனை விடுங்க.. வேறு ஒரு சர்ப்ரைஸ் இருக்காமே.. திமுகவில் அதிரிபுதிரி.. இது ட்விஸ்ட்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. கூடுதல் துறைகள் கொடுக்கப்பட உள்ளன. உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். தொழிற்துறை உதயநிதிக்கு வரலாம். ஊரக துறை கூட உதயநிதிக்கு வரலாம், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வந்ததும் இதற்கான முடிவு எடுக்கப்படும். கொடைக்கானலில் இருந்தபடி ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருகிறாராம். அதில், சிறப்பாக செயலாற்றிய அமைச்சர்கள், சிறப்பாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார்.

திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் நடக்கும் உட்கட்சி மாற்றங்கள் குறித்து ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. கூடுதல் துறைகள் கொடுக்கப்பட உள்ளன. உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். தொழிற்துறை உதயநிதிக்கு வரலாம். ஊரக துறை கூட உதயநிதிக்கு வரலாம். வேறு சில துறைகளும் பேசப்படுகின்றன. எந்த துறை வேண்டுமானாலும் வரலாம். புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட வாய்ப்பு குறைவு.
இருக்கிற அமைச்சர்களுக்கு இடையிலேயே துறை மாற்றம் ஏற்படலாம். மாவட்ட செயலாளர் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட ஒரு செயலாளர் என்று மாற்ற வாய்ப்புகள் குறைவு. இதெல்லாம் செய்தால் கட்சி வளரலாம். ஆனால் அது நடக்குமா என்று தெரியாது. அப்படி நடந்தால் பல சர்ச்சைகள் வரும். கட்சி ரீதியாக பல மாற்றங்கள் வரும். அப்படி வாய்ப்புகள் இல்லை.
மாவட்ட செயலாளர் மாற்றம்; 4 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வரலாம். ஆனால் 2 தொகுதிக்கு என்று வர வாய்ப்பு குறைவு. திமுகவில் கூவுதலாக் 6-7 மாவட்டங்கள் உருவாகலாம். ஆனால் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றெல்லாம் வர வாய்ப்புகள் குறைவு. கட்சியில் இதனால் அதிருப்தி ஏற்படலாம். ஏற்கனவே காண்டிராக்ட் பிரச்சனை உள்ளது. கான்டிராக்ட் ஏற்கனவே அதிமுக தலைகளுக்கு செல்கிறது என்ற புகார் உள்ளது. அதை தடுக்க வேண்டும்.
திமுக 10 வருடமாக ஆட்சிக்கு வராமலே வலிமையாக இருந்தது. 10 வருடம் ஆட்சியில் இல்லாமல் தாங்கி நின்றது திமுகவின் பலம். அதை திமுக உணர வேண்டும். இந்த பலத்தை திமுக காத்துக்கொள்ள வேண்டும். இதை உதயநிதி ஸ்டாலினும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிமுக போல திமுக நடக்க கூடாது. அதிமுகவில் செய்கிறார்கள் என்பதற்காக செய்ய கூடாது, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications