தமிழக லோக்சபா தேர்தல் முடிவை.. துல்லியமாக கணித்த அதே டீம்.. மகாராஷ்டிரா சர்வேயில் ட்விஸ்ட் தராங்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த முறை திமுக 39 இடங்களையும் வெல்லும் என்று அக்னி நியூஸ் குழு கணித்து இருந்தது. அதேபோல் தேசிய அளவிலும் லோக்சபா தேர்தல் முடிவுகளை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்தது. தற்போது மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாகவும் இவர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 164 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 117 இடங்களில் வென்று எதிர்கட்சியாக மாறும் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 7 இடங்களில் மற்ற கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் குழு கணித்து உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும். இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளின்படி
பி-மார்க் - பாஜக கூட்டணி 137-157 - காங்கிரஸ் கூட்டணி - 126-146 - மற்றவை - 2-8
மேட்ரிஸ் - பாஜக கூட்டணி 150-170 - காங்கிரஸ் கூட்டணி - 110-130 - மற்றவை - 8-10
சாணக்கியா - பாஜக கூட்டணி 152-160 - காங்கிரஸ் கூட்டணி - 130-138 - மற்றவை - 6-8
டைனிக் பாஸ்கர் - பாஜக கூட்டணி 125-140 - காங்கிரஸ் கூட்டணி - 135-150 - மற்றவை - 20-25
லோக்ஷாஹி மராத்தி ருத்ரா - பாஜக கூட்டணி 128-142 - காங்கிரஸ் கூட்டணி - 125-140 - மற்றவை - 18-23
வாக்கெடுப்பு டெய்ரி - பாஜக கூட்டணி 122-186 - காங்கிரஸ் கூட்டணி - 69-121 - மற்றவை - 12-29
பீப்பிள்ஸ் பல்ஸ் - பாஜக கூட்டணி 175-195 - காங்கிரஸ் கூட்டணி - 85-112 - மற்றவை - 7-12
சராசரி கருத்துக்கணிப்பு - பாஜக கூட்டணி 141-164 - காங்கிரஸ் கூட்டணி - 111-134 - மற்றவை - 10-16
இதில் பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ் ஆகியவை பாஜக கூட்டணி கண்டிப்பாக வெல்லும் என்று கணித்து உள்ளன. ஆனால் மற்ற கணிப்புகள் கிட்டத்தட்ட இரண்டு கூட்டணிகளும்.. அதாவது பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டும் கிட்டத்தட்ட மெஜாரிட்டி மார்க்கான 145க்கு அருகே வரும்.. அதாவது தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று கணிப்புகளை வெளியிட்டு உள்ளன.
அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிதான் ஆட்சி என்று பல்வேறு கணிப்புகள் கூறிய நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று டேனிக் பாஸ்கர் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 125-140 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மாறும் என்று டேனிக் பாஸ்கர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 135-150 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 20-25 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மகாராஷ்டிராவில் எங்கே தொங்கு சட்டசபை உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே மீண்டும் ரிசார்ட் அரசியல் தலை தூக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications