காங் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி பற்றி கேள்வி எழுப்பிய ரகுபதி.. பதில் கொடுத்த அமைச்சர் விஸ்வநாதன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசின் கொள்கை வடிவமைப்பாளர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அது உண்மையா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டசபையில் பதில் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்க்க அதீத முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் பிரவீன் சக்கரவர்த்தி. தேர்தல் சமயத்திலேயே தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Is Congress MP Praveen Chakravarty TN Govt s Policy Strategist Minister Viswanathan Clarifies

மே 4 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதுமே தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் விஜய்யை சந்தித்தவர்களில் பிரவீன் சக்கரவர்த்தியும் ஒருவர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சரானார் விஜய்.

தவெகவுக்கு கிடைக்க வாய்ப்பிருந்த முதல் ராஜ்யசபா எம்.பி சீட்டை காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கினார் விஜய். தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி பதவி வகிக்கிறார். இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் "கொள்கை வடிவமைப்பாளர்" பதவி, காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்பினார் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி. "காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்திக்கு, தமிழ்நாடு அரசின் கொள்கை வடிவமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அது உண்மையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், "பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவர் இந்த அவையின் உறுப்பினர் இல்லை என்பதால் அவரைப் பற்றி பேசுவது மரபு இல்லை" என பதில் அளித்தார். இந்த பதிலுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, "பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாடு அரசில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.

ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+