போதும்டா சாமி.. இந்த சீசனோடு.. முக்கியமான ஒரு வீரரை கழற்றிவிடும் சிஎஸ்கே? தோனி கசப்பான முடிவு?
சென்னை: சிஎஸ்கே அணி முக்கியமான ஒரு வீரரை 2023 சீசனோடு ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருப்பதாக சிஎஸ்கே அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறது. தொடக்கத்தில் வரிசையாக வெற்றிகளை குவித்த சிஎஸ்கே அதன்பின் சரிவை சந்தித்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 2ம் இடத்தில் உள்ளது.

கடைசியாக டெல்லிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. இந்த மேட்சில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறி வந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. பவுலிங் செய்ய வசதியாக பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் இன்னும் ஸ்லோ ஆகும். அதோடு ஸ்பின் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்துவிட்டு, டெல்லி அணியை சேஸ் செய்ய வைக்க தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
ஓப்பனிங் இறங்கிய கெய்க்வாட் 18 பந்தில் 4 பவுண்டரி அடித்தார். 24 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். 13 பந்தில் கான்வே 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பந்துகள் பிடித்த மொயின் அலி வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ரஹானேவும் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் தோனி 9 பந்தில் 20 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 167/8 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சால்ட் 17, மணி பாண்டே 27, ரைலி 35 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் டெல்லி அணி வெறும் 140-8 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது.
சீசன்:இந்த சீசனில் ப்ளே ஆப் முன்பு இன்னும் 2 போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. இதில் ஒன்றில் வென்றால் கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி முக்கியமான ஒரு வீரரை 2023 சீசனோடு ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருப்பதாக சிஎஸ்கே அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர் மிடில் ஆர்டரில் ஆட கூடிய மூத்த வீரர். இந்த சீசனில் அவர் சரியாக ஆடவில்லை. அணிக்காக பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை.
ஆடிய போட்டிகளில் சொதப்பிவிட்டார். அதோடு அணி நிர்வாகிகளுடன் பெரிய அளவில் நெருக்கமாக அவர் இல்லை. தோனியுடன் இருக்கும் நட்பை தவிர அவருக்கு பெரிதாக அணியின் டாப் நிர்வாகம் மீது அதே வீரருக்கு நெருக்கம் இல்லை.
இதனால் இந்த சீசனோடு அவரை அனுப்பிவிட்டு அடுத்த சீசனில் கேப்டன்சி திறன் கொண்ட வேறு ஒரு மூத்த வீரரை உள்ளே கொண்டு வர சிஎஸ்கே அணி ஆலோசனை செய்து வருகிறதாம்.
அந்த வீரரும் வேறு அணியில் கேப்டனாக களமிறங்கும் ஆசையில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications