உடனே நீக்குங்க! எடப்பாடி வைத்த வேண்டுகோள்.. ஓ இதுதான் டெல்லியின் சீற்றத்திற்கு காரணமோ? பின்னணி
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க எடப்பாடி முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடக்காத நிலையில் இன்று திரும்ப வேண்டிய எடப்பாடி பழனிசாமி நேற்றே சென்னைக்கு திரும்பிவிட்டார்.
டெல்லி பயணத்தில் மோடியை எடப்பாடி சந்திக்க முடியாமல் போனதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்லி
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி - பாஜக இடையில் தற்போது சரியான உறவு இல்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர். தற்போது நடக்கும் ரெய்டுகள் காரணமாக இந்த விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு முன்பில் இருந்தே.. கடந்த சில மாதங்களாக இரண்டு தரப்பு உறவில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக பாஜக தன்னை எதிர்க்கட்சியாக முன்னிறுத்தியதை அதிமுக தரப்பும், எடப்பாடியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி முக்கியம்
முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கையில், பல்வேறு பாஜக தலைவர்கள், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு பல இடங்களில் பேட்டி கொடுத்தனர். அண்ணாமலையின் பேச்சும் சில இடங்களில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போலவே அமைந்து இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு கட்சிகளின் கூட்டணி முறிந்தது.

இரண்டு தரப்பு உறவு
இதன்பின்பில் இருந்தே இரண்டு தரப்பு உறவு சரியாக இல்லை என்றே கூறப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆன போது அதை பாஜக தலைவர்கள் யாரும் வாழ்த்தவில்லை. பாஜக டெல்லி தலைவர்கள் இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. இதன் காரணமாக எடப்பாடி தரப்பு பாஜக தலைவர்களுடன் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
இந்த நிலையில்தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை ஜிஎஸ்டி விவகாரத்தில் லேசாக பட்டும் படாமல் விமர்சனம் செய்தார். அதில், பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், சாமான்ய மக்கள் உட்பட அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி
ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. . உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனால் உடனே இந்த வரியை நீக்க வேண்டும். இதற்கு திமுக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் உடனே இந்த மாற்றங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கோபம்
திமுக அரசை விமர்சித்தும், மத்திய அரசை லேசாக விமர்சித்தும் எடப்பாடி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் டெல்லி பாஜக தலைகள் இந்த அறிக்கையை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த மற்ற விஷயங்களோடு சேர்ந்து இந்த விஷயமும் சேர்ந்து கொண்ட நிலையில்தான் எடப்பாடி மீது டெல்லி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
Recommended Video

எடப்பாடி திட்டம் என்ன?
ஆனால் இதனால் எடப்பாடி பெரிய வருத்தத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்போது நாம் ஆட்சியில் இல்லை. நமக்கு மடியில் கனமில்லை. ரெய்டுகளை பார்த்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் இப்போதும் நாம்தான் பெரிய கட்சி. அதனால் நாம் அச்சப்பட தேவையில்லை. டெல்லியை வரும் நாட்களில் சமாதானம் செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications