அவமானப்படுத்துனா விடுவாங்களா? தோனி எடுக்க போகும் முக்கிய முடிவு.. சிஎஸ்கே அணியில் நடக்கும் மாற்றம்?
சென்னை: ராஜஸ்தானுக்கு எதிராக நாளை நடக்க போகும் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஐபிஎல் சீசன் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.

அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இந்த நிலையில் இந்த சீசனில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி மீண்டும் ராஜஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிராக நாளை நடக்க போகும் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் சிறப்பாக ஆடி வருகிறார். கான்வே பார்மில் இருக்கிறார். ரஹானே சர்ப்ரைஸ் எண்ட்ரியாக வந்து அதிரடி காட்டிக்கொண்டு இருக்கிறார்.

துபே சிஎஸ்கே மிடில் ஆர்டருக்கு புதிய பலம் கொடுத்து உள்ளார். மொயின் விரைவில் பார்மிற்கு வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, மற்றும் எம்.எஸ். தோனி என்ற டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல் ஜடேஜாவும் காயம் எதுவும் இல்லாத காரணத்தால் தொடர்ந்து ஆடுவார். இவரை தவிர சிசண்டா மகலா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று பேருக்கும் காயம் சரியாகவில்லை. அவர்கள் இந்த மேட்சில் ஆட வாய்ப்பே இல்லை.
பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் தீக்சனா பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் பின் வரும் வீரர்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
1. டெவோன் கான்வே
2. ருதுராஜ் கெய்க்வாட்
3. அஜிங்க்யா ரஹானே
4. மொயின் அலி
5. சிவம் துபே
6. ரவீந்திர ஜடேஜா
7. எம்.எஸ் தோனி (சி & வி.கே.)
8. மிட்செல் சான்ட்னர்
9. மதீஷ பத்திரன
10. துஷார் தேஷ்பாண்டே
11. ஆகாஷ் சிங்
அவமானம்:
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில்தான் மிட்சல் சாண்ட்னருக்கு நேர்ந்த அவமானம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மிட்சல் சாண்ட்னர் கடந்த போட்டியில் ஆடவில்லை. அப்போது போட்டிக்கு இடையில் அவரை பேட்டி எடுத்த சைமன் டுயோல்.. அவரை கடுமையாக கிண்டல் செய்தார். உங்களுக்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் போய் கூல்ட்ரிங் பாட்டில் தூக்கவும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.
சிஎஸ்கே அணியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்படுவதை சுட்டிக்காட்டி இப்படி கிண்டல் செய்தார்.
இதையடுத்து நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications