Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோனி மகள் ஸ்கூல் ஃபீஸ் இத்தனை லட்சமா? இந்தப் பள்ளி எங்கே இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தல தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளியைப் பற்றிய தகவலும் அவரது ஆண்டு கட்டணம் பற்றிய விவரமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வரும் 2025 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் 'தல’ தோனி இடம் பெறுவாரா? அவரை அணி தக்கவைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்ப்பு ஒரு பக்கம் மிக அதிகமாக நிலவி வருகிறது. இதில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்துத்தான் தோனியின் இடம் உறுதியாகப் போகிறது என்றும் சொல்கிறார்கள்.

dhoni dhoni daughter

சிஎஸ்கேவின் தக்கவைப்பு பட்டியல் தயாராகிவிட்டதாகவும் அதில் மொத்தம் 5 வீரர்களை உறுதிசெய்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. அதில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோருடன் கட்டாயம் தோனியும் இடம்பிடித்துள்ளார் என்றும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு இருக்கும் வரவேற்பு உலகம் அறிந்த ஒரு விசயம். இந்நிலையில்தான் தோனியின் சொந்த வாழ்க்கை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. தோனிக்கு அவர் மகள் மீது எந்தளவுக்கு அன்பு இருக்கிறது என்பதை அவரது ரசிகர்கள் அறிவர்.

சின்ன குழந்தையாக இருந்த போதில் இருந்தே அவரைப் பற்றிய ஒவ்வொரு தகவல் இணைய உலகில் வைரலாகியதை பலர் அறிவர். அப்படி என்ன தகவல் கிடைத்துள்ளது என அவரது ரசிகர்கள் இப்போதே ஆர்வமாகக் கேட்கலாம். தோனியின் மகள் ஜிவா தற்போது படித்து வருகிறார். அதுவும் கூல் கேப்டன் மகள் பற்றிய செய்தி என்றால் ஆர்வம் அள்ளாதா?

தோனி மகள் ஜிவா பிப்ரவரி 6, 2015 ஆம் ஆண்டு பிறந்தார். இப்போது அவருக்கு 9 வயதாகிறது. ஜிவா தோனி தற்போது அவரது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற டவுரியன் வேர்ல்ட் பள்ளியில்தான் படித்து வருகிறார். அமித் பஜ்லா என்பவரால் 2008ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.

இந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற போர்டிங் மற்றும் டே ஸ்கூல்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்தப் பள்ளி 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த வளாகத்தில் அமைந்துள்ளது. கல்விக்காக முழுமையான மையமாக இது செயல்படவேண்டும் என்ற நோக்குடன் நிறுவப்பட்டது.

இந்தப் பள்ளியின் நிறுவனர் சாதாரணமானவர் இல்லை. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பழைய மாணவர்தான் இந்த அமித் பஜ்லா. இது தொடங்கப்பட்டதிலிருந்தே அதன் உந்துசக்தியாக இருந்திருக்கிறார். இப்போது அதன் சேர்மேனாக பணியாற்றி வருகிறார். இப்போது மும்பையில் வசிக்கும் பஜ்லா, கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பள்ளியை ஒரு முன்னணி நிறுவனமாக இவர் உருவாக்கியுள்ளார்.

இயற்கை விவசாயம், குதிரை சவாரி, உடல் மற்றும் மனநலனில் கவனம் செலுத்துவது ஆகிய பாரம்பரிய கல்வியாளர்களுக்கு அப்பாற்பட்ட பல வசதிகளை இந்தப் பள்ளி வழங்கி வருகிறது. அனைத்து செயல்பாடுகள் சார்ந்தும் இப்பள்ளியில் போதிக்கப்படும் பாடத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த டவுரியன் வேர்ல்ட் ஸ்கூல் சர்வதேச ஆசிரியர்கள் உட்பட பலதரப்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பள்ளி ஜிவாவின் சேர்க்கையால் ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. பாடத்திட்டம் கல்விசார் சிறப்பை மட்டுமல்ல, படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, நுண்ணறிவு ஆகியவற்றை வளர்க்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்காகப் பெரிய கோடீஸ்வரர்கள் முன் வரிசையில் போட்டிப் போட்டு காத்திருக்கின்றனர். இங்கே படிக்க வைக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு பல லட்சங்களைச் செலவிட வேண்டு இருக்கும். இங்கே எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் தோராயமாக ரூ. 4.40 லட்சமாகும். அதேபோன்று ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான கட்டணம் ரூ. 4.80 லட்சமாகும்.

இந்தக் கட்டணங்களில் சீருடைகள், பாடப்புத்தகங்கள், பிற தேவையான பொருட்கள் ஆகிய அத்தியாவசியமானவை அடங்கும். கல்வியாளர்கள், விளையாட்டு, தனித்திறன் சார்ந்த செயல்பாடு என அனைத்திற்கும் கட்டணம் உண்டு. உலகத் தரம் மிக்க சுழலை உருக்கிக் கொடுத்துள்ள இந்தப் பள்ளியில் சாதாரண மக்கள் காலடி எடுத்து வைப்பது கடினம்.

இங்கே உள்ள வகுப்பறைகள், முழுக்க ஸ்மார்ட் ரூம் ஆக இருக்கின்றன. அறிவியல் கூடங்கள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன. வகுப்பறையைத் தாண்டிய செயல்பாடுகளால் இது கவனத்தை ஈர்க்கும் பள்ளியாக மாறியுள்ளது. பல தொழிலதிபர்களின் பார்வை இந்தப் பள்ளியின் மீது விழுந்துள்ளதால் சேர்க்கையின் போது கடும் போட்டி நிலவிவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+