பெரிய புள்ளி தவெக தாவுதா? விஜயின் 25% வாக்கு வங்கியால் நடுங்கும் திமுக.. இதுதான் ரிசல்ட்: பிரபலம்
சென்னை: திமுக அதிமுகவில் பணம் தந்துதான் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.. ஸ்டாலின், எடப்பாடி இருவரின் ரோடு ஷோக்களுக்கும் பல லட்சங்களை கொட்டிதான், கூட்டத்தை திரட்டுகிறார்கள்.. ஆனால், இதை அதிமுக, திமுக இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. விஜய்க்கு இப்போதுவரை காசு தராமலேயே கூடுகிறார்கள் என்றாலும், போகப்போக அந்த கூட்டம் எப்படி மாறும் என்பது தெரியவரும்" என்று பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Label Tamil Nadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "ரசிகர் மனப்பான்மையிலிருந்து தொண்டர்கள் வருவதாக தெரியவில்லை.. அதேபோல தான் ஒரு அரசியல் கட்சி தலைவராகிவிட்டோம், மக்களுக்காக பேச வேண்டும் என்ற புரிதல் விஜய்க்கும் இல்லை..

4 நாள் தவெக தலைவர் பிரச்சாரம்
ரசிகர்களுக்கான பேச்சாகவே விஜய்யின் பேச்சு உள்ளது.. இந்த முறை சுற்றுப்பயணத்தில் என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.எனினும் அவரது அணுகுமுறை எப்படியிருக்க போகிறது? என்பது குறித்து ஓரளவு இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்..
சட்டமன்ற தேர்தல் என்பதால், திமுகவை மட்டுமே தாக்கி விஜய் பேசக்கூடும்..அதேசமயம், 4 நாள் தொடர்ந்து பேசும்போது, உள்ளூர் பிரச்சனைகளையே பிரதான விஜய் பேசக்கூடும் என்கிறார்கள்.. முதல்முறை சுற்றுப்பயணம் என்பதால் மீடியாவின் லைம்லைட் அதிகமாகவே இருக்கும்.. இது போகப்போக குறையும்.. எனவேதான், 4 நாள் கழித்து சுற்றுப்பயணத்தில் இடைவெளி எடுக்கப்படுகிறது..
விஜய்யின் சுற்றுப்பயணம்
திமுக அதிமுகவில் பணம் தந்துதான் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.. ஸ்டாலின், எடப்பாடி இருவரின் ரோடு ஷோக்களுக்கும் பல லட்சங்களை கொட்டிதான், கூட்டத்தை திரட்டுகிறார்கள்.. ஆனால், இதை அதிமுக, திமுக இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்..
விஜய்க்கு இப்போதுவரை காசு தராமலேயே கூடுகிறார்கள் என்றாலும், போகப்போக அந்த கூட்டம் எப்படி மாறும் என்பது தெரியவரும். விஜய்யின் சுற்றுப்பயணம் கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம்போலத்தான்.. எனவே, மாவட்ட பிரச்சனை + தமிழகத்தின் பிரச்சனை இரண்டையுமே விஜய் பேசித்தான் ஆகணும்.. எனினும் எப்படி பார்த்தாலும், திமுகவுக்கு இது நெருக்கடிதான்.
திமுக ஓட்டு உடையும்
2 கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, திமுக, அதிமுக, விசிக, பாஜக, மதிமுக இந்த கட்சிகளில் ஓரம் கட்டப்படக்கூடிய தலைவர்கள், முன்னாள் எம்பி எம்எல்ஏக்கள், இனி பதவிக்கு ஆசைப்படுபவர்கள், விஜய் பக்கம் போவதற்கு தவியாய் தவிக்கிறார்கள்.. துடியாய் துடிக்கிறார்கள்.. ஆனால் விஜய் இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.. இதுவரை பெரிய நபர்கள் யாரையுமே சந்திக்கவில்லை..
இதுதான் இப்போது சிக்கலாக உள்ளது.. ஒருகாலத்தில் செல்வாக்குடன் தங்களது கட்சியில் கோலோச்சியவர்கள், செல்வாக்கை இழந்த முன்னாள் எம்பிக்கள், விஜய்க்காக 4 மணி நேரம் காத்து கிடந்து, அவரை பார்க்க முடியாமல் திரும்பியிருக்கிறார்கள்.. அதிலும் தேசிய கட்சிகளில் முன்னாள் எம்பிக்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.. திமுக, அதிமுக என மாறி மாறி போனவர்களும் விஜய்க்காக காத்து கிடந்து,. அவர் கண்டுகொள்ளவில்லை என்றதால், உடனே விஜய்யை விமர்சித்தும் வருகின்றனர்.
விஜய் ஒன்றும் எம்ஜிஆர் கிடையாது
திமுக, அதிமுக, பாமக, மதிமுக, விசிக தலைவர்கள் திமுக பக்கம் இருந்தாலும், தொண்டர்கள் விஜய் பக்கம் தாவ வாய்ப்புள்ளது.. அதிலும் இடைநிலை தலைவர்கள், தொண்டர்கள் விசிகவில் நிறையவே வாய்ப்புள்ளது.. ஆனால், இவர்களை எல்லாம் விஜய் கண்டுகொள்ளவேயில்லை..
எல்லா தொகுதிகளிலும் விஜய் மட்டுமே போட்டியிட முடியுமா? விஜய் ஒன்றும் எம்ஜிஆர் கிடையாது.. தமிழ்நாட்டுக்கு ஒரு எம்ஜிஆர்தான்.. வேறு யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது.. எம்ஜிஆரை பிடிக்குதோ இல்லையோ, அவர் ஒரு அதிசய பிறவி.. இன்னும் 500 வருடங்களுக்கு பேசக்கூடிய பிறப்பு.. எம்ஜிஆராக வரவேண்டும் என்று சூடு போட்டு கொண்டவர்கள்தான் இங்கு அதிகம்..
நடுங்கும் திமுக
இப்போதைக்கு தவெக என்றாலே விஜய் மட்டும்தான் இருக்கிறார்.. ஒரு கட்சி, ஒரு தலைவனை மட்டுமே நம்பி இருக்க முடியாது.. அடுத்தடுத்த தலைவர்கள் இருக்க வேண்டும்.. அந்தவகையில் தவெகவில் விஜய்க்கு அடுத்து தலைவர் தகுதியில் யார் இருக்கிறார்கள்? இப்படி இருந்து கொண்டு எப்படி தேர்தலில் விஜய் வெற்றி பெறுவது? எப்படி முதலமைச்சராவது?
20 சதவீதம் ஓட்டுவங்கி விஜய்க்கு இருப்பது உண்மை.. 25 சதவீதம்வரை இது போகலாம்.. எல்லா கட்சி ஓட்டுக்களையும் உடைப்பார், குறிப்பாக திமுக, அதிமுகவின் ஓட்டுக்களை உடைப்பார்.. அதனால்தான், திமுக உண்மையில் நடுங்கி கொண்டிருக்கிறது.. இன்று விஜய்யை பார்த்து மட்டுமே பயப்படுகிறது..
1000 ரூபாய் திட்டம், இலவச பஸ் பயணம்
வயது வித்தியாசமில்லாமல் திமுகவிலிருந்து விஜய் பக்கம் நகரும்.. திமுக அரசின் 1000 ரூபாய் உரிமைத்தொகை, இலவச பஸ் பயண திட்டம் இது எதுவுமே விஜய் பக்கம் போவதை தடுக்கவில்லை..
1000 ரூபாய், திமுக பணமா? எங்க பணத்தைதானே எங்களுக்கு தருகிறார்கள் என்கிறார்கள். அதுவும் ஆட்சிக்கு வந்ததும் தராமல் இரண்டரை வருடம் கழித்து தருகிறார்கள்.. அதுவும் எல்லாருக்குமே தராமல், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே தருகிறார்கள்.. எனவே திமுக ஓட்டு உடைந்து விஜய் பக்கம் பெரும்பாலும் தாவக்கூடும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications