அப்படி போடு! இப்படியெல்லாம் நடக்குதா? விஜய் பற்றி ஸ்டாலினுக்கு போகுது சர்வே.. உளவுத்துறை அவசர மூவ்
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக ஆளும் திமுக தரப்பு சர்வே எடுக்க முடிவு செய்துள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விஜய்க்கு இருக்க கூடிய மாஸ் தொடர்பாக சர்வே நடத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.
விஜய்யின் கொடி: போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.
கொடி ஏற்றிய பின் மேற்கொள்ளப்பட உள்ள உறுதிமொழி வெளியாகி உள்ளது. விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பின்வரும் உறுதி மொழியை படித்தனர்.
அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியை கூறப்பட்டு உள்ளது.
திமுக அதிகம் பயன்படுத்தும் சமூக நீதி என்று வார்த்தையை தனது உறுதிமொழியை விஜய் இணைத்துள்ளார்.
சர்வே: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக ஆளும் திமுக தரப்பு சர்வே எடுக்க முடிவு செய்துள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விஜய்க்கு இருக்க கூடிய மாஸ் தொடர்பாக சர்வே நடத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
விஜயின் வாக்கு சதவிகிதம் எவ்வளவு இருக்கும்.. அவருக்கு எந்த வயது வாக்காளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.. முதல் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆதரவு இருக்கும், கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? எந்த பகுதியில் விஜயின் பவர் அதிகம் இருக்கும் என்ற கேள்விகளுடன் சர்வே எடுக்க ஸ்டாலின் உளவுத்துறைக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications