Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது பக்கா பிளான்! லோக்சபா தேர்தலில் கமலை இறக்கும் ஸ்டாலின்.. டிக் அடிக்கப்பட்ட தொகுதி.. அப்போ அதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ஒன்றும் டிக் அடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

Is DMK going to field Makkal Needhi Maiam Kamal Haasan in South Chennai in Lok Sabha election?

லோக்சபா தேர்தல்: இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் லோக்சபா தேர்தல் பற்றி பேசி இருக்கிறார். அதில், தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லோக்சபா தேர்தல் பணிகள் பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். பூத் கமிட்டிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டிக்கு சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள். லோக்சபா தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40க்கு 40 நம்முடைய இலக்கு. அதற்கான பணிகளை இப்போதே செய்திடுங்கள்.

எனக்கு தேர்தல் பணிகள் சுணக்கம் குறித்து எந்த புகாரும் வரக்கூடாது. கவனமாக பணிகளை செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கூட்டத்தில் பேசி இருக்கிறார். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துள்ளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை என்றும் அவர் கூறி உள்ளாராம்.

கமல் போட்டி: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ஒன்றும் டிக் அடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வந்தார்.

முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

அதன்பின் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். எதிர்பார்த்தபடியே இவர்கள் கடைசியில் கூட்டணி வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவும் அளித்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.

கமல் நாடாளுமன்ற தேர்தல்: அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் சார்பாக எம்பி தேர்தலுக்கு கமல்ஹாசன் போட்டியிட உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக கமல்ஹாசன் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகர்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நேரத்தில் கட்சியை உருவாக்குவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதே நிர்வாகி திமுகவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.

அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் முடிவு செய்ததாக கூறப்பட்டது. அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. திமுக + காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கமலுக்கு மாநில அரசியலில் பெரிதாக ரோல் இருக்காது. அது திமுக + கமல் இடையே ஒரு வித conflict of intrest ஐ ஏற்படுத்தும் என்பதால் கமல்ஹாசன் பெரும்பாலும் தேசிய அரசியல் மீது கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை. இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் கமலுக்கு வெற்றி வாய்ப்புகளும் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையிலும் இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக காணப்பட்டார்.

Is DMK going to field Makkal Needhi Maiam Kamal Haasan in South Chennai in Lok Sabha election?

தொகுதி பைனல்: அதன்படி கமல்ஹாசனை தென் சென்னையில் களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தென்சென்னையில் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார். மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் திமுக வேட்பாளராக இவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டதாகவும், லோக்கல் அளவில் தேர்தல் பணிகளை இப்போதே திமுக செய்து வருவதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+