தவெக விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ் ராஜ்.. ஆட்டம் ஆரம்பமா? நெட்டிசன்கள் காரசார விவாதம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்ற வியூகத்துடன் விஜய் கட்சி பணிகளை தொடங்கிவிட்டதால், விஜயை எதிர்கொள்ள ஆளும் திமுகவும் தற்போதே தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திமுக, நடிகர் பிரகாஷ் ராஜ்ஜை விஜய்க்கு எதிராக களமிறக்கலாமா? என யோசிப்பதாக சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இது தொடர்பாக காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் டாப் நடிகரான விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், தனது கட்சியின் கொடியையும் கொடிப் பாடலையும் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தார். கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் கொள்கையையும் மாநாட்டில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார்.

வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள, வி சாலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது. மாநாட்டிற்கான பந்தக்கால் நேற்று முன்தினம் நடப்பட்டது. மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையை அறிவிப்பதாக விஜய் அறிவித்துள்ளதால், இந்த மாநாட்டை அனைத்து கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்க தயாராகிவிட்டன.
விஜயின் அரசியல், திராவிட பாணி அரசியலை பின்பற்றியே இருக்கும் என்று அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் கருத்தாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்ற வியூகத்துடன் விஜய், கட்சி பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், விஜயை எதிர்கொள்ள ஆளும் திமுகவும் தற்போதே தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய்யை பொறுத்தவரை மிகப்பெரிய நட்சத்திரம். இதனால், அவரது அரசியல் எண்ட்ரி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யை எதிர்க்கொள்ள வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக திமுக, நடிகர் பிரகாஷ் ராஜ்ஜை விஜய்க்கு எதிராக களமிறக்கலாமா? என யோசிப்பதாக சொல்லப்படுகிறது.
பிரகாஷ் ராஜ்ஜை பொறுத்தவரை தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலை செய்பவர். கர்நாடகாவில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். ஆனாலும் பாஜக எதிர்ப்பு அரசியலை கைவிடவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார். தமிழகத்திலும் திமுகவின் அனுதாபியாகவே உள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற திருச்சி சிவா புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ், திமுகவையும் துணை முதல்வர் உதயநிதியையும் பாராட்டி பேசினார். தொடர்ந்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்திலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். #justAsking என்ற ஹேஷ்டேக்குடன் துணை முதல்வருடன் என்ற கேப்ஷனுடன் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தமிழக மக்கள் மத்தியிலும் பரிட்சயமான நடிகர் என்பதால், விஜய்க்கு எதிராக பிரசாரத்தில் அவரை களமிறக்கலாமா? என திமுக யோசித்து வருகிறதாம்.. தேர்தல் நேரத்தில் விஜய் கட்சிக்கு எதிராக தமிழகம் முழுக்க பிரகாஷ் ராஜ்ஜை பிரசார பீரங்கியாக திமுக பயன்படுத்தினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். விஜய் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என்பதே நெட்டிசன்கள் வாதமாக இருக்கிறது.
நடிகர் விஜயின் கடைசி படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். நேற்று முன் தினம் தளபதி 69 பட பூஜை நடந்துள்ளது. வாரிசு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!











Click it and Unblock the Notifications