திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் எத்தனை இடங்களில் போட்டி? கமல் ஹாசனுக்கு அந்த தொகுதி.. கன்பார்ம்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கமல்ஹாசன்: கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது.
கோவையில் போட்டியில்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆ. ராசா - எல் முருகன் இடையே போட்டி நிலவும் பட்சத்தில் இங்கே அண்ணாமலை போட்டியிடும் பட்சத்தில்.. அவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
வேறு தொகுதியா? : கோயம்புத்தூர் இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.
இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில்.. பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல்.. கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications