மீண்டும் திமுக தானா? ஸ்டாலின் - இபிஎஸ் - அமித்ஷா - விஜய் கட்டத்தின் ரகசியம்! ஜோதிடர் கணிப்பு
சென்னை: 2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பிரபல ஜோதிடர் பிரதோஷ் முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா ஆகியோரின் கிரக நிலை மற்றும் விஜயின் கட்சியின் செயல்பாடு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த கணிப்பு வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழு விவரம் வருமாறு:
தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, தவெக தலைவர் விஜயின் தவெக கட்சி என நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் ஒவ்வொரு கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஜோதிடர் ஒருவர் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு தலைவர்களின் ராசி அடிப்படையில் அவர் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா, விஜய் ஆகியோர் எந்த வகையான வியூகம் வகுத்தாலும் கூட அதனை தாண்டி முதல்வர் ஸ்டாலினின் கிரக நிலை பலமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ள நபரின் பெயர் பிரதோஷ். இவர், தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ சிம்ம ராசி (முதல்வர் ஸ்டாலின் சிம்ம லக்னம், சிம்ம ராசியில் பிறந்தவர்) முதல்வர் ஸ்டாலின் ராசி) தற்போது மிகவும் சக்திவாய்ந்த நிலையில் உள்ளது. 11ம் இடத்தில் உள்ள குரு மக்கள் ஆதரவையும், அமைப்பு வலிமையையும் குறிக்கிறது. சிம்ம ராசிக்கு 6ம் அதிபதி 8 ம் இடத்தில் இருப்பது விபரீத ராஜயோகம்.
நெருக்கடிகளை சமாளித்து வெற்றியை கொண்ண்டு வரும். ஜோதிடத்தை கண்மூடித்தனமான பயத்துடன் பார்க்காமல் சரியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். 7 ம் வீட்டில் .ள்ள ராகுவின் மீதான குருவின் பார்வை சாதகமாக உள்ளது. எனவே சிம்மராசி வலுவாக உள்ளது.
Tamil Nadu Election 2026 Astrological Update
— Prathosh (@Prathosh2021) December 24, 2025
Simha Rashi is currently very powerful.
Guru in the 11th gives mass support and organisational strength.
Shani Bhagwan in Ashtama for Simha is not simple trouble as fear-mongers claim.
For Simha, 6th lord in 8th = Vipareeta Raja… pic.twitter.com/K6kLiRo3Bw
இருப்பினும் தசா புத்தி தான் இறுதி முடிவை தீர்மானிக்கும். குறிப்பாக தனிப்பட்ட தசா புத்தி தான். திமுக தலைமையான ஸ்டாின் மற்றும் உதயநிதியின் ஜாதகங்கள் வலுவாக உள்ளன. சூரிய சக்தி பலமாக உள்ளது. அனைத்து கிரகங்களுக்கும் சூரியன் தான் ராஜா. சூரியனை வீழ்த்துவது எளிதாக விஷயம் இல்லை.
ராகுவால் மட்டும் தான் அதனை செய்ய முடியும். அதனால் தான் சிம்ம ராசியை எதிர்க்கும் சக்தி ராகு பகவானுக்கு மட்டுமே உள்ளது. அமித்ஷாவிடம் ராகு எனர்ஜி நன்றாக உள்ளது. ஆனால் ராகு மட்டுமே போதாது. ராகுவிற்கு குருவின் ஆசீர்வாதம் வேண்டும்.அதேபோல் சுக்ரனுடன், ராகு சேர்ந்தால் மொத்தமாக ‛கேம்' சேஞ்ச் ஆகும். இதில் சுக்ரன் யார்? இது விரைவில் வெளிப்படும்.
விஜயின் தவெகவை எடுத்து கொண்டால் கடக ராசி. அவரது பிறந்த தேதி தெரியவில்லை. இதனால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இருப்பினும் ஒன்று மட்டும் இறுதி. தவெகவை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. இதுபற்றி இறுதி கணிப்பில் விரிவா சொல்கிறேன். 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் என்பது எளிதான தேர்தலாக இருக்காது. இது ராகு - சூர்யனின் மெகா திரில்லராக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில், ‛‛2026 சட்டசபை தேர்தலை ஜோதிட ரீதியாக பார்த்தால் சிக்கலானதாக தெரிகிறது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. கூட்டணி ஆட்சி அமையலாம். திமுக (சிம்மம்/சூரியன்) வலுவாக தெரிகிறது. சூரியனை வீழ்த்துவது எளிதல்ல. அமித்ஷா ராகு சாணக்கிய சக்தியை குறிக்கிறார்.
TamilNadu Election 2026 looks astrologically complex.
— Prathosh (@Prathosh2021) December 23, 2025
No party likely to get absolute majority.
Coalition govt indicated. DMK (Simha/Surya) appears strong
Surya is not easy to defeat.
Amit Shah represents the Rahu Chanakya force, powerful but needing wider support.… pic.twitter.com/2wDbRlNWsL
அவர் சக்தி வாய்ந்தவர் என்றாலும் இன்னும் ஆதரவு தேவைப்படுகிறது. சுக்ரன் அவருடன் இணைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும். இது சாதாரண தேர்தல் அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.
-
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
வசமாக சிக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவின் ஸ்கெட்ச்! தவெகவுக்கு இப்படியா நடக்கனும்! -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
காலம் கடந்துவிட்டது விஜய்! இந்த சமாளிப்புகள் இனி உதவாது! இப்தாருக்கு காத்திருந்தது ஏன்? -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்!












Click it and Unblock the Notifications