திமுக அண்ணா அறிவாலயம் 'ரெட்லைட் ஏரியா'வா? உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஷாக் பதில்!
சென்னை: "சென்னை அண்ணா அறிவாலயம் பற்றி பேசுகிற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் சென்னை அண்ணாசாலை பக்கமாவது வரட்டும்" என திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்து பேசியதற்கு பதிலாக, 'அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா'வா? என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார்... அண்ணாமலை இருக்கட்டும்.. நானே வருகிறேன்.. எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைமை குறிங்க..

தமிழக முதல்வர் அவர்களே! இது தமிழ்நாடு. எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும். இதில் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வரக் கூடாது என சொன்னால், அது ரெட்லைட் ஏரியாவா (விபசாரம் செய்யும் இடமா).. அது ரெட்லைட் ஏரியாவா? அங்க வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க முடியும்? கேவலமான ஒன்று.
உதயநிதி ஸ்டாலின் தம்முடைய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்; ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என கூப்பிட சொல்றாங்க..சரி சந்தோஷப்படுவோம். அது தப்பு கிடையாது.. ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என சொன்னால்.... ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.
மதிமுகவின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயப் பக்கத்தில் ஒரு பெரிய ஊர்வலமாக வந்து இதே அறிவாலயம் மீது தாக்குதல் வரும் என்ற நிலை இருந்தது. அன்றைக்கு ஜெயலலிதாதான் பாதுகாப்பு கொடுத்தார். இன்றைக்கு வேற ஏதாவது மாற்றி எங்க பகுதிக்கு வந்துடாதீங்க என சொல்கிறார்கள் எனில் ஒன்று அவர்கள் அறிவாலயத்தை தவறாக நடத்துகிறார்கள் என்கிற பொருளில் முடியும். அது வேறு ஒரு விஷயம்.. சவால் விடுகிறீர்கள் எனில் நாங்கள் வருகிறோம்.
நாங்கள் ரெட்லைட் ஏரியா என சொன்னதால் அதற்குதான் வருகிறீர்களா? என அடுத்த கேள்வி கேட்பார்கள்.. இந்த குசும்பு வேலை எல்லாம் செய்வாங்க.. நீங்க சவால்விடுங்க.. நாங்க வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்.. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அறிவாலம் என்ன ரெட் லைட் ஏரியாவா ? pic.twitter.com/4vi5sYlrEQ
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) February 20, 2025
உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்து Get Out Modi என சொல்லித்தான் பார் என்றார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையாக பேசியது, அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இவர்களை Go Back Modi என்று சொல்லிவிட்டார்கள். 2018-ம் ஆண்டு திருட்டுத்தனமாக சுவரை உடைத்துக் கொண்டு மோடி வந்தார். மக்களை சந்திக்க பயந்தார். கருப்புக்கொடி காட்டினார்கள். பலூன் பறக்கவிடப்பட்டது. அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த நிதி தொடர்பான பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார்கள். போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? நான் வீட்டில் தான் இருப்பேன் வரட்டும்.
அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை ஏதோ கூறினாரே, முடிந்தால் அண்ணா சாலை பக்கமாவது வரட்டும். பிரச்சினையை உதயநிதிக்கும் பாஜக மாநில தலைவருக்கும் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். நிதியை பெற்று தர முயற்சி செய்ய சொல்லுங்கள என கூறியிருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேட்டிக்குதான் பொன்.ராதாகிருஷ்ணன், அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? என அதிர்ச்சி தரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
-
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications