ஈரோடு கிழக்கு தேர்தல்.. பின்வாங்கும் அதிமுக? எடப்பாடி எடுக்க போகும்.. ஆனால் இப்படி ஒரு காரணமா?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளதாம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளதாம்.
காரணங்கள் என்னென்ன?:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
அதோடு தற்போது இரட்டை இலை வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன.
தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்கும் முன் ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. எடப்பாடிக்கு இது கூடுதல் சிக்கல் ஆகி உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நின்றால் சின்னம் முடங்கும்.. அதோடு தோல்வி அடைந்தால் தொடர் தோல்வியால் அழுத்தம் அதிகரிக்கும். இதை தவிர்க்கவே எடப்பாடி இந்த தேர்தலை புறக்கணிக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications