சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணக்கு இடிக்குதே! உச்சகட்ட முடிவை எடுக்கும் எடப்பாடி.. ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் "அக்னி பரீட்சை"

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.. அதோடு உயர் நீதிமன்றமும் இன்று நடந்த விசாரணையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவகாரங்களை கேட்டுள்ளது.

இதனால் ஒற்றை நீதிபதி அமரவும் பெரும்பாலும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பொதுக்குழு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர் பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர்

இந்த கருத்தை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வாதம் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும்பாலும் ஜூலை 11ம் தேதி பெரும்பாலும் பொதுக்குழு சிக்கலின்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு

பொதுக்குழு

பொதுக்குழுவை கூட்டுங்கள்.. அடுத்த மீட்டிங் தேதி குறிப்பிட்டபடி நடக்கட்டும்.. இதற்கு நாங்கள் தடை விதிக்க முடியாது.. அதே சமயம் ஒற்றை நீதிபதி உயர் நீதிமன்றத்தில் முடிவு எடுக்கட்டும்.. பொதுக்குழுவில் தீர்மானம் செய்யப்பட வேண்டிய விஷயங்களை ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டதால் பொதுக்குழு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில் தெரிவித்துள்ளது.

விவாதம்

விவாதம்

இந்த உத்தரவு காரணமாக.. ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும். பொருளாளர் என்ற முறையில் இவர் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் திட்டத்தில் இல்லை.

பொதுக்குழு விதிமீறல்

பொதுக்குழு விதிமீறல்

இந்த பொதுக்குழுவே விதிமீறல் என்று அவர் கூறி வருகிறார். இதன் காரணமாக அவர் பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என்பதே சந்தேகம் ஆகி உள்ளது. அவர் ஒருவேளை ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை புறக்கணித்தால், அவரால் கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அப்படி செய்யும் பட்சத்தில் அது கட்சி விதிமீறல் ஆகிவிடும். இதை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் உச்சக்கட்ட முடிவை எடுக்க முடியும்.

உச்சக்கட்ட முடிவு

உச்சக்கட்ட முடிவு

உச்சக்கட்ட முடிவு என்றால் அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்க முடியும். அதையும் தாண்டி, பொதுக்குழு விதிகளை மீறினார் என்று கூறி பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க முடியும். இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இருந்தே நீக்க முடியும். அதோடு ஓ பன்னீர்செல்வம் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

Recommended Video

    ADMK-வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறாரா EPS? பொதுக்குழுவில் முடிவு ? *Politics
     ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம் தவறு செய்துவிட்டார் என்று நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது. ஓ பன்னீர்செல்வமுடன் சமாதானம் ஏற்படாத பட்சத்தில்.. கணக்கு வழக்கில் குறைபாடு உள்ளது. நிதி குறைகிறது என்று கூறி, ஓ பன்னீர்செல்வம் மீது வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. நிதி முறைகேடு தொடர்பான புகார்கள் வைக்கப்படும் எல்லைக்கு கூட எடப்பாடி பழனிசாமி தரப்பு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஓ பன்னீர்செல்வம் என்ன செய்வார்.. இந்த அக்னீ பரீட்சையை எப்படி தாண்டுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Is Edappadi Palanisamy going to sack O Panneerselvam due to the Treasury posting irregularities? அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.. அதோடு உயர் நீதிமன்றமும் இன்று நடந்த விசாரணையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவகாரங்களை கேட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X