மறுபடியும் சிக்குறாரே எடப்பாடி.. சீமான் + விஜய்யை நம்பி சிக்கலில் மாட்டும் அதிமுக.. மொத்தமாக போச்சே
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அதிமுக செய்த ஒரு தவறை மீண்டும் தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுக செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைக்க அதிமுக தீவிரமாக முயன்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முக்கியமாக பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
தோல்வி: முக்கியமாக எடப்பாடிக்கு அருகே இருந்த சிலர்.. அவருக்கு ஆலோசனை வழங்கிய "அரசியல் ஆலோசகர்கள்" சிலர்.. காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம். காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாம். திமுக + காங்கிரஸ் கூட்டணியை உடைக்கலாம் என்று ஆலோசனைகள் வழங்கினர்.
ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை . கூட்டணியில் கடைசியில் பாமக கூட வர முடியவில்லை. அதிமுகவிற்கு அந்த அளவிற்கு சிக்கல் ஏற்பட்டது.
மீண்டும் செய்கிறார்: 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அதிமுக செய்த அந்த தவறை மீண்டும் தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுக செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
1. தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
2. முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
3. ஆனால் காங்கிரசை நம்பி தப்பு கணக்கு போட்டது போல எடப்பாடி மீண்டும் நாம் தமிழர் - விஜய்யை நம்பி தப்பு கணக்கு போடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
4. ஏனென்றால் விஜய் புதிய கட்சி. அவரின் வாக்கு வங்கி உறுதியாகவில்லை. இன்னொரு பக்கம் தொடக்கமே அவர் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பதால் விஜய் கண்டிப்பாக அதிமுகவுடன் சேர மாட்டார்.
5. இன்னொரு பக்கம் சீமான் என்ன நடந்தாலும் நாம் தமிழர் தனியாக நிற்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படி இருக்க மீண்டும் காங்கிரசை நம்பி 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அதிமுக செய்த அந்த தவறை மீண்டும் தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுக செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications