ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தி.மு.க-வைப் பொறுத்தவரை 'மிஷன் 200' என இலக்கு நிர்ணயித்து காய் நகர்த்தி வரும் நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய வியூகம் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

tamilnadu Election 2026 2026 tamil nadu amit shah

அதிர்ச்சி தரும் அந்த 15 தொகுதிகள்!

தற்போதைய தி.மு.க அமைச்சர்கள் வசம் இருக்கும் 14 தொகுதிகள் மற்றும் சபாநாயகர் அப்பாவு வசம் இருக்கும் ராதாபுரம் தொகுதி என மொத்தம் 15 மிக முக்கியமான தொகுதிகளைத் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. "அமைச்சர்களை அவர்கள் கோட்டையிலேயே வீழ்த்த வேண்டிய அ.தி.மு.க, இப்படித் தாரை வார்ப்பது ஏன்?" என்பதே தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் எது என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
-ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் என்னென்ன?

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:-

* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்

* திருச்சி மேற்கு

* சென்னையில் சைதாப்பேட்டை

* சென்னை பூந்தமல்லி

* திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள்

தர்மபுரி
பென்னாகரம்
விக்கிரவாண்டி
சோளிங்கர்
திருப்போரூர்
ஜெயங்கொண்டம்
ரிஷிவந்தியம்
காட்டுமன்னார்கோவில்
சேலம் வடக்கு
உத்திரமேரூர்
போரூர்
செஞ்சி
விருத்தாசலம்
பெரம்பூர்
கீழ்வேளூர்
மயிலாடுதுறை
அம்பத்தூர்
சேலம் மேற்கு

ஸ்டாலினின் 'நேரடி மோதல்' ஃபார்முலா!

கடந்த 2021 தேர்தலை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஒரு அதிரடி முடிவை எடுத்தார். 'அ.தி.மு.க அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க-வே நேரடியாகக் களம் காணும்' என அறிவித்தார். உடுமலைப்பேட்டை, கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து அமைச்சர் தொகுதிகளிலும் தி.மு.க-வே நேரடியாக மல்லுக்கட்டியது. அந்தத் துணிச்சல்தான் தி.மு.க-வுக்கு வெற்றியைக் கொடுத்தது.

அதேபோல், ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் கடினமான சவால்களைத் தன் தோளில் சுமக்கத் தயங்கியதே இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அண்ணாமலை போட்டியிட்ட கோயம்புத்தூர் தொகுதியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல், தி.மு.க நேரடியாகவே களம் இறங்கியது.

திண்டுக்கல் தியாகம்; கோவை விவேகம்!

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2019 தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி திண்டுக்கல். 'வெற்றி உறுதி' எனத் தெரிந்தும், அந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, சவாலான கோவையை தி.மு.க கையில் எடுத்தது. இதுதான் ஒரு தலைவனுக்கான 'லீடிங் ஃபிரம் தி ஃப்ரண்ட்' பண்பு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எடப்பாடியின் கணக்கு தப்புமா?

"தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பலமான வேட்பாளர்களை நிறுத்தி அ.தி.மு.க நேரடியாக மோதினால் மட்டுமே தொண்டர்கள் உற்சாகமடைவார்கள். அதைவிடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு அந்தத் தொகுதிகளை ஒதுக்குவது அமைச்சர்களுக்கு 'வாக்க ஓவர்' கொடுப்பது போலாகிவிடும். எடப்பாடியின் இந்த 'சேஃப் கேம்' தி.மு.க அமைச்சர்களுக்குத்தான் சாதகமாக முடியும்" எனத் தலைமை நிலைய நிர்வாகிகள் சிலரே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஸ்டாலின் காட்டிய அந்தத் துணிச்சலை எடப்பாடி பழனிசாமி காட்டுவாரா அல்லது கூட்டணிக் கட்சிகளின் பின்னால் ஒளிந்துகொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+