நச்சுன்னு பிளான்.. குட்டையை குழப்பிய எடப்பாடி.. திமுகவை திக்கி திணற வைக்க போகிறார்.. கசிந்த ரகசியம்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி - பாஜக மீண்டும் இணைந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இரண்டு பேரும் மோதிக்கொள்ளவில்லை. கருத்து தெரிவிப்பது இல்லை. அதனால் இரண்டு பேரும் சேர போகிறார்களோ என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். அவரின் இந்த பேட்டி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
( அமித் ஷாவை விடுங்க.. எடப்பாடியை "லெப்ட் ஹேண்டில்" டீல் செய்யும் சோனியா.. சுக்கு நூறான அதிமுக கனவு )
ஓ பன்னீர்செல்வம் கலக்கம்: அதில், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் முடிவு எடுக்க எதுவும் இல்லை. சபாநாயகர் அப்பாவுவே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். சபாநாயகர் அப்பாவு மரபுப்படி ஆர்பி உதயகுமாரை அமர வைக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இதனால் அதிமுக உள்ளே ஒரு விதமாக மோதல் நீடித்து வருகிறது. அதிமுக மோதல் முடியவில்லை. வழக்குகள் நடக்கிறது. அதனால் இப்போது முடிவு எடுக்க முடியாது என்று சபாநாயகர் கூறுகிறார்.

அதிமுக பிரச்சனையில் திமுக விசிறிவிட்டுக்கொண்டு.. புகையை அதிகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதே சமயம் இதில் சபாநாயகர் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர். அவருக்கே எல்லா அதிகாரமும் உண்டு. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி சட்டப்படி இல்லாத பதவி. அப்படி இருக்க சபாநாயகர் இதில் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். இதெல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாறி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் இதில் எதுவுமே செய்ய வேண்டாம். தானாக எல்லாம் அவருக்கு ஆதரவாக வந்துள்ளது.
இன்னொரு பக்கம் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேருமே இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். உள்ளே இருக்கும் உறுப்பினர்கள் எல்லாம் இவர்கள் இரண்டு பேருமே கையெழுத்து போட்டு வென்று வந்தவர்கள். இப்போது இவர்களுக்கு உள்ளே சண்டை உள்ளது. அப்படி இருக்க சபாநாயகர் இதில் முடிவு எடுக்க நேரம் எடுத்துக்கொள்கிறார். இதனால் வழக்கு கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டில் பரிசீலனை நடந்து வருகிறது. அதனால் சபாநாயகர் இதில் முடிவு எடுக்காமல் இருக்கிறார். சபாநாயகர் நினைத்தால் செய்யலாம்.. ஆனால் அவர் செய்யாமல் இருக்க சட்ட ரீதியாக சில காரணங்கள் உள்ளன.
எடப்பாடி பிளான்: இதனால் ஓ பன்னீர்செல்வம் எதுவுமே செய்யாமல் அவருக்கு சாதகமாக நிலைமை உள்ளது. மற்றபடி ஓ பன்னீர்செல்வம் கூட்டங்கள், பேரணிகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை. இதற்கு முன் அவர் மேற்கொண்ட பயணங்கள் பலன் அளிக்கவில்லை. கோவையில் அவர் கூட்டம் நடத்த உள்ளார். எப்படியாவது கொங்கு மண்டலத்தில் தனது பவரை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அது பலன் தருமா என்பது தெரியவில்லை. அவர் தான் ஏமாற்றப்பட்டதாக கருதுகிறார். அவரின் பேச்சு வியப்பாக, வேடிக்கையாக உள்ளது.

அவர் அதிமுகவில் இத்தனை காலம் இருந்த போது, பல்வேறு பதவிகளில் இருந்த போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி பற்றி ஓ பன்னீர்செல்வம் பேசவில்லை. கட்சியில் பவர் இருந்த போதே ஓ பன்னீர்செல்வம் நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும் . ஆனால் அதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் அப்போது திறமை இன்றி இருந்தார். அவருக்கு அரசியல் வியூகம் தெரியவில்லை. இப்போது எடப்பாடி பழனிசாமி - பாஜக மீண்டும் இணைந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார்.
இரண்டு பேரும் மோதிக்கொள்ளவில்லை. கருத்து தெரிவிப்பது இல்லை. அதனால் இரண்டு பேரும் சேர போகிறார்களோ என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். இப்போது எடப்பாடி வெளியே வர காரணம் தெரியவில்லை. அவர் இஸ்லாமியர்களை ஆதரிப்பது எல்லாம் சுத்த நாடகம். திமுக கூட்டணியில் குட்டையை குழப்ப இப்படி எடப்பாடி பழனிசாமி செய்கிறார். இப்படி பேசி திமுக கூட்டணி கட்சிகளை குழப்பி.. திமுகவிடம் கூடுதல் இடங்களை பெற வைக்க அதிமுக நடத்தும் நாடகம் இது என்றுதான் நான் நினைக்கிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications