அமித் ஷாவை விடுங்க.. எடப்பாடியை "லெப்ட் ஹேண்டில்" டீல் செய்யும் சோனியா.. சுக்கு நூறான அதிமுக கனவு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் செயல் ஒன்று அதிமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
தமிழ்நாடு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் இப்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் நடக்க தொடங்கி விட்டன. இந்த முறை கூட்டணி பார்முலாக்கள் மாறுமா.. இல்லை அதே கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அடிபோட்டு வருகிறார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக தற்போது காங்கிரஸ் பக்கம் செல்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.
அதிமுகவிடம் அரசியல் ஆலோசகராக இருந்த நபர்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இவர்தான் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருக்கிறார். இந்த நபர் காங்கிரசில் முக்கிய பதவியும் பெற்றுள்ளார். திமுகவிற்கு இவர் பணிகளை செய்து இருந்தாலும்.. இவருக்கும் திமுகவிற்கு இப்போது ஏழாம் பொருத்தம் என்கிறார்கள். இவர்மூலம்தான் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைய போவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவித்தன.

மெகா கூட்டணி; பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சரியும் என்றுதான் எடப்பாடி கூட்டணியை முறித்தார். இந்த நிலையில்தான் காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி அந்த அரசியல் ஆலோசகர் மூலமாக முயன்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. பாஜகவுடன் இப்போது அதிகாரபூர்வமாக அதிமுக கூட்டணியில் இல்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உருவாக்காமல் உறவை முறிக்க முடிவு எடுத்துவிட்டனர்.
( எந்த பதவியும் கிடையாது.. எடப்பாடிக்கு பெரிய செக் வைக்கும் "அதிமுக" விஐபி.. டெல்லி சக்கை போடு போடுதே! )
அதோடு தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக இல்லாமல் எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கிறார் என்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தேவை. தேசிய கட்சி இல்லாமல் லோக்சபா தேர்தலை சந்திப்பது பெரிய அளவில் பின்விளைவுகளை தரும். அப்படி இருக்கத்தான் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது.

சோனியா காந்தி: இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் செயல் ஒன்று அதிமுகவை அதிர்ச்க்கு உள்ளாகி உள்ளது. அதன்படி சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்காக சோனியா காந்தி தமிழ்நாடு வந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்கு பிறகு சென்னை வருகிறார் சோனியா காந்தி.
இன்று இரவு சென்னை வரும் சோனியா காந்தியை நேரில் சென்று வரவேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இங்கே எடப்பாடி எப்படியவாது கூட்டணி உருவாக்கலாம் என்று முயன்று வரும் நிலையில் இந்திய கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக திமுகவின் கட்சி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொள்ள சோனியா வந்துள்ளார். அவரின் இந்த வருகை அதிமுகவை பெரிதும் அப்செட்டாக்கி உள்ளது. காங்கிரஸ், பாஜக இல்லாமல் எந்த கூட்டணி அமைத்தாலும் அது லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணியாக இருக்காது.. இதனால் அதிமுகவின் மெகா கூட்டணி கனவு சுக்குநூறாக உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications