எந்த பதவியும் கிடையாது.. எடப்பாடிக்கு பெரிய செக் வைக்கும் "அதிமுக" விஐபி.. டெல்லி சக்கை போடு போடுதே!
சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரிய வலைப்பின்னல் ஒன்றை மேற்கொள்ள பாஜக முயன்று வருகிறதாம். பாஜகவிற்கு உள்ளேயும், அதிமுகவிற்கு உள்ளேயும் ரகசியமாக ஒரு குரூப் இதற்காக வேலைகளை செய்து வருகிறதாம்.
அதிமுக உள்ளே கட்சியை உடைக்க "விஐபி" எம்எல்ஏ ஒருவர் முயன்று வருகிறார் என்று நாம் ஏற்கனவே செய்திகளில் குறிப்பிட்டு இருந்தோம். அதாவது அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. பாஜகவுடன் இனி கூட்டணி கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை அதிமுக எடுத்துவிட்டது. 2024 லோக்சபை தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலில் கூட கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை அதிமுக எடுத்துவிட்டது.

அதிமுகவின் இந்த நிலைப்பாடு பாஜகவை ஒரு பக்கம் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுக உள்ளேயே சிலர் இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்களாம். அதன்படி அதிமுக கட்சிக்கு உள்ளேயே இருக்கும் மாஜி அமைச்சர் ஒருவர் இந்த கூட்டணி முறிவால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். அவர் அப்செட் காரணமாக பாஜக உதவியுடன் அதிமுகவை உடைக்கும் திட்டத்திலும் கூட இருக்கிறாராம். தனக்கு பாஜக உறவு முறிவால் பிரச்சனை வரக்கூடாது என்று அவர் நினைக்கிறாராம்.
அதன்படி அதிமுக கட்சி ஒருவேளை பாஜகவுடன் 2024 தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுகவை உள்ளிருந்து உடைக்க கூட சிலர் தயாராகி வருகிறாராம். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று கண்டிஷனை போட அவர் முடிவு செய்துள்ளாராம். அந்த மாஜி எடப்பாடியிடம் சென்று.. இந்த கோரிக்கையை வைக்க உள்ளாராம். அந்த கோரிக்கையை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்.. கட்சியை உடைக்க கூட அவர் ரெடியாக இருக்கிறாராம். பாஜகவிற்கு ஆதரவாக கட்சியை உடைத்து கழகத்தில் கலகம் ஏற்படுத்தும் முடிவில் கூட அவர் இருக்கிறாராம்.
பாஜக பிளான் என்ன?: இப்படிப்பட்ட நிலையில் பாஜக உள்ளே இருக்கும் டெல்லி லீடர் சிலர் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்த முடிவு செய்து உள்ளனராம். பாஜக- அதிமுக கூட்டணி இருந்தால் எம்பி சீட் கிடைக்கும். அமைச்சர் ஆகலாம் என்று தமிழ்நாட்டில் சிலர் நம்பிக்கையில் இருந்தனர். இப்போது அதிமுக கூட்டணியை முறிந்துவிட்டது. இதில் எடப்பாடியும் உறுதியாக இருக்கிறார்.
எடப்பாடி பதவியில் நீடித்தால் நமக்குத்தான் சிக்கல். அதனால் அவருக்கு அதிமுகவில் எந்த பதவியும் இல்லாத மாதிரி அவரை தூக்க வேண்டும் என்று டெல்லி தரப்பில் சில பாஜக தலைகள் காய் நகர்த்தி வருகிறார்களாம்.
டெல்லி சிக்னல்: இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக தலைவர்கள், எடப்பாடியை இங்கே பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை. அதை பாஜக அறிவிக்கவில்லை. 2024ல் எங்கள் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்றால்.. 2026ல் எங்களை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துக்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மறந்தார், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை மறந்தார்.. தற்போது இப்போது பிரதமர் மோடியை மறந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஏன் அதிமுக - பாஜக கூட்டணியை முறித்தார் என்று தெரியாது. ஆனால் அவரின் முடிவிற்கு எதிராக பாஜக மேலிடம கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள், பாஜக தலைகள்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications