"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரங்கேறி வரும் அரசியல் அதிரடிகள் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேற்றைய தினம் மம்தாவின் உறவினரும் திரிணாமுல் கட்சியின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் தலைவருமான அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டு இருந்தார். அபிஷேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் முதல்வரை சிஇஓ பிரதீப் டாண்டனை மம்தா பானர்ஜி தொலைப்பேசியில் மிகக் கடுமையாகச் சாடும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை ஏற்பட்ட இடங்களை மம்தாவின் உறவினரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரை சிலர் சுற்றி வளைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அபிஷேக் பானர்ஜி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Mamata Banerjee West Bengal Mamata

அபிஷேக் பானர்ஜி

இது ஒரு பக்கம் இருக்க.. அபிஷேக் பானர்ஜி பொதுமக்களால் தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மருத்துவமனை சிஇஓ உடன் மம்தா பேசும் ஆடியோ ஒன்று லீக் ஆகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனைப் பாஜக மாநில ஊடகப் பேச்சாளர் டெப்ஜித் சர்க்கார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆடியோவில் மம்தா பானர்ஜி பெல்லி வியூ மருத்துவமனையின் சிஇஓ பிரதீப் டாண்டனிடம் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்.

மம்தா ஆடியோ

அந்த ஆடியோவில் மம்தா, "மிஸ்டர் டாண்டன், நீங்கள் மிக பெரிய தவறு செய்துவிட்டீர்கள். அரசு உங்களுக்கு இதுவரை என்னென்ன நன்மைகளைச் செய்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களை அந்த கடவுள் கூட மன்னிக்க மாட்டார். உங்களின் இந்த அகங்காரத்தை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக, நீங்கள் மருத்துவமனையை நடத்திக் கொண்டு மருத்துவர்களை மிரட்டுகிறீர்களா? நாளை இந்த மத்திய அரசு அங்கே இருக்காது... அப்போது நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்கிறோம், நினைவிருக்கட்டும்!" என்று பேசியிருக்கிறார்.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாஜக சொல்வது என்ன

இந்த ஆடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் டெப்ஜித் சர்க்கார், "அபிஷேக் பானர்ஜிக்கு மருத்துவப் பரிசோதனையில் எந்தவொரு பெரிய காயமும் இல்லை என்று வந்த பிறகும், அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி மம்தா பானர்ஜி நிர்வாகத்திற்கு பிரஷர் கொடுத்துள்ளார். இது சிஐடி அனுப்பியுள்ள விசாரணைச் சம்மனில் இருந்து அபிஷேக் பானர்ஜியை தப்பிக்க வைப்பதற்காக நடத்தப்படும் நாடகம். அரசியல் அழுத்தங்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது" என்றார்.

முன்னதாக, தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதிக்குத் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட தொண்டர்களைச் சந்திக்க எம்பி அபிஷேக் பானர்ஜி சென்றிருந்தார். அப்போது அங்குத் திரண்டிருந்த பொதுமக்களில் சிலர், "திருடன்... திருடன்..." என முழக்கமிட்டு, அவர் மீது சரமாரியாக முட்டைகளை வீசி, தாக்குதல் நடத்தினர்.

என்ன நடந்தது

நிலைமை உடனடியாகக் கைமீறிப் போகவே, பொதுமக்கள் வீசிய கற்களில் இருந்து தப்பிக்க எம்பி அபிஷேக் பானர்ஜிக்குக் கிரிக்கெட் ஹெல்மெட்' மாட்டி, அதிரடிப் படையினர் அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் மம்தா, "ஹெல்மெட் மட்டும் அணியவில்லை என்றால் என் அபிஷேக் அங்கேயே மடிந்திருப்பார்.. மருத்துவமனையைச் சேர்க்கக் கூடாது எனப் போலீசாரை வைத்தே பாஜகவினர் மிரட்டுகிறார்கள்" என குற்றம் சாட்டியுள்ளார். இந்த வன்முறை தொடர்பாகத் தற்போது 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு பெல்லி வியூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அபிஷேக் பானர்ஜியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக வெளியேறி வீட்டிற்கு அனுப்பினர். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நோயாளிக்கு நெஞ்சுப் பகுதியில் சில லேசான காயங்களைத் தவிர வேறு எந்தவொரு தீவிரமான உள் காயங்களோ, ஆபத்தான அறிகுறிகளோ இல்லை. அவர் முழு நினைவோடும், சுய உணர்வோடும் ஆரோக்கியமாகப் பேசுகிறார். எனவே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை" எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+