Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்!
சென்னை: என்னை துரந்தர் என விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்தி தெரியாது போடா என்பதுதான் எனது பதில் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: First of All, துரந்தர் என்றால் என்ன அர்த்தம் என எனக்கு புரியவில்லை. மதசார்பற்ற வெற்றிக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துரந்தராக இருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன் பிறகு அந்த வார்த்தை சோசியல் மீடியாவில் பரவியது.

துரந்தர் என்றால் என்ன என அவர் விளக்கம் சொல்லட்டும். அது ஒரு திரைப்படம். அந்த படத்தின் டைட்டிலை வைத்து என்னை ஏன் அவர் விமர்சித்தார்? நான் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். எல்லாரும் கேட்ட போது நான் சொன்னேன்!
துரந்தர் என்றால் அந்த படத்தில் ஒரு உளவாகியாக ஒரு கேரக்டர் வருகிறது. துரந்தர் என்ற வார்த்தையே இந்தி வார்த்தை! இந்த விமர்சனத்திற்கு ஒரு செகன்ட்டில் நான் பதில் சொல்லிட்டு போக முடியும்!
"இந்தி தெரியாது போடா" இதுதான் ஆதவ் அர்ஜுனாவின் துரந்தர் விமர்சனத்திற்கு என்னோட பதில்! எதற்காக அந்த வார்த்தையை சொல்கிறார், யாரை பார்த்து அந்த வார்த்தையை சொல்கிறார்? தேமுதிக என்றைக்கு இருந்தாலும் உண்மையைத்தான் பேசுவோம், மக்களுக்காக, நாட்டுக்காக பேசுவோம்.
அன்று அண்ணன் ஸ்டாலின் சேலத்தில் மேடையில் இருந்த போது பெண்களின் பொதுக் கூட்டத்தில் நான் பேசியது, "இந்த ஆட்சி (திமுக) மீது இரண்டே இரண்டு குறைகள்தான்! ஒன்று பாலியல் வன்கொடுமை, இன்னொரு சட்டம் ஒழுங்கு. அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை சரி செய்ய வேண்டும்" என சொன்னேன்.
ஆனால் உண்மை தெரியாமல் முதல்வரை வைத்துக் கொண்டே பேசுகிறார், கூட்டணி கட்சியினர் முன்பே பிரேமலதா இப்படி பேசுகிறார் என்கிறீர்கள். ஏன் மக்கள் பிரச்சினைகளை பேசவே கூடாதா? இதை அண்ணன் ஸ்டாலினே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த கூட்டணியும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத போது உங்களுக்கு என்ன பிரச்சினை என நான் கேட்கிறேன்.
உள் மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தைகளாக வரும், இந்த வார்த்தையை சொன்னவர் நிச்சயம் எதிர்காலத்தில் துரந்தராக மாறாமல் இருந்தால் வரவேற்கத்தக்கது. எனவே துரந்தர் என்ற வார்த்தைக்கு எனது பதில் இந்தி தெரியாது போடா என்பதுதான் தமிழகத்தில் இந்திக்கும் எனது வார்த்தைக்கும் ஒரு பதில் என தெரிவித்துக் கொள்கிறேன்!
எந்த பேரத்திற்கும் சோபா செட்டிற்கும் பதவிக்கும் ஆசைப்படாமல் திமுக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவில் தேமுதிக உறுதியாக உள்ளது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின் வேறு கூட்டணி என்ற நிலை தேமுதிகவுக்கு எப்போதும் இல்லை.
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசியபோது எடப்பாடி பழனிசாமி, அரை பர்சென்ட் வாக்கு வங்கி கட்சி, ஐசியூவில் இருக்கும் கட்சி என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத காரணத்தால் அதிமுக ஐசியூவிற்கு சென்றுவிட்டது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுக்காமல் விட்ட பாவம் தற்போது தவெக மூலம் தண்டனையை பெற்று வருகிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என விஜயகாந்த் அடிக்கடி சொல்வார். அது அதிமுக விவகாரத்தில் உண்மையாகிவிட்டது. இவ்வாறு பிரேமலதா பேசினார்.
-
"அதிமுக தொண்டர்களிடம் பிச்சை கேட்கிறீர்களா?" ஆதவ் அர்ஜுனா மீது ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications