அதிமுக தோற்கல.. தோற்க வச்சதே சின்னம்மா தான்? வேதனையில் எடப்பாடி., அதிமுகவில் அதிரடி எண்ட்ரியாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. டிடிவி தினகரனை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் நேருக்கு நேர் பேசியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாம். இந்த நிலையில் சசிகலாவும் அதிமுகவுக்குள் வர வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கின்றனர். தேர்தலுக்கு முன்பு போட்டி அதிமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி எடப்பாடி பழனிச்சாமியை தோல்வி அடையச் செய்து அதிமுகவை கைப்பற்றுவதுதான் சசிகலாவின் எண்ணம் எனவும், அதை நோக்கியே அவரது திட்டங்களும் இருந்ததாக சொல்கின்றனர்.

ஒரு காலத்தில் எஃகு கோட்டையாக இருந்த அதிமுக இப்போது எறும்பு புற்று போல சரிந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் என பெயர் பெற்ற அதிமுக இப்போது உட்கட்சி மோதல்களால் சிக்கித் தவிக்கிறது.

Sasikala

ஜெயலலிதா காலத்தில் அவரது நிழலாக இருந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். முதல்வராகவும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் தான் அதிகாரம் காட்டினார்.

அதிமுக

இதனால் ஓபிஎஸ் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர். சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி பேச்சை கேட்டு ஒற்றைத் தலைமை முழக்கத்தை எழுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேறினார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் அதற்குப் பிறகு பொதுச் செயலாளராகவும் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் எப்படியாவது 2026 சட்டசபை தேர்தலில் வென்று அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருந்தார்.

விஜய் அலை

ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போனது.. தமிழகம் முழுவதும் வீசிய விஜய் அலையால் அதிமுக சின்னாபின்னமானது. எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் பல ஆண்டுகள் இருந்த கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி அதிகரித்ததால் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் கொங்கு மண்டலங்களிலும் தென் மாவட்டங்களிலும் முக்கியமான தலைவர்களாக கருதப்பட்ட சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி

இந்த நிலையில் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் பகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய போது டிடிவி தினகரன் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என நிர்வாகி ஒருவர் கூறியதால் அதிர்ச்சியில் உறைந்து போனாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஒரு வழியாக அவர் பேசி சமாளித்தாலும், கட்சி அலுவலகத்தில் தனக்கு நேர் எதிராக நின்று டிடிவி தினகரன் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என நிர்வாகிகள் பேசியதை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை என்கின்றனர்.

சசிகலா

மேலும் இது அவரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது என்றும் சொல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சசிகலாவை சைலன்டாக அதிமுகவுக்குள் கொண்டுவரும் வேலையும் நடந்து வருவதாக சொல்கின்றனர். ஏற்கனவே சசிகலா அதிமுக ஒன்று சேர வேண்டும் இல்லை என்றால் தோல்விதான் மிஞ்சும் என சொல்லி வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை கண்டு கொள்ளவில்லை.

2026 சட்டமன்றத் தேர்தல்

எதிர்பார்த்தது போல அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதை அடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் மீண்டும் அதிமுகவில் எழத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் மூலம் சசிகலா இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் எழுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

பழனிச்சாமிக்கு ஸ்கெட்ச்

2026 தேர்தலில் அதிமுக வென்றுவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி சக்தி வாய்ந்த தலைவராக மாறிவிடுவார் என்பதால் அவ்வாறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணிகள் வலுவாக அமைக்க முடியாமல் எடப்பாடியை திணற வைத்தது, பாமக ராமதாஸ் தரப்பை கூட்டணிக்கு அழைத்தது தானும் தனது ஆதரவாளர்கள் மூலம் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை நிற்க வைத்து தோல்வியடை செய்தது என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்கெட்ச் போட்டதே சசிகலா தான் எனவும், தற்போது அவர் நினைத்த விஷயங்கள் அதிமுகவில் நடந்து வரும் நிலையில் என்ட்ரி கொடுக்க சசிகலா தயாராகி வருகிறார் என்கின்றனர் டெல்டா அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+