விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலின் தாக்கமே இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், அடுத்த அரசியல் பரபரப்பாக 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உருவெடுத்து வருகிறது. ஆளுங்கட்சியான தவெகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வரும் நிலையில், அதிமுக மட்டும் இன்னும் குழப்பமான மனநிலையிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 தேர்தலில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தவெக ஆட்சியை கைப்பற்றியது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக திமுக - அதிமுக என்ற இருமுனைப் போட்டியில் இயங்கி வந்த அரசியலை மாற்றி அமைத்தது.

tvk dmk aiadmk

இந்த தேர்தல் முடிவால் திமுக எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டதோடு, அதிமுகவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழத் தொடங்கின. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி வெளிப்படையாக வெடித்தது.

அதிமுக

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்தனர். குறிப்பாக மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி உறுப்பினர் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜய்

இந்த நான்கு ராஜினாமாக்களும், முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியை முதல்-அமைச்சர் விஜய் தக்கவைத்துக் கொண்டதால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாகியுள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தவெக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற்றிருந்தாலும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல்

ஆட்சிக்கு வந்த பிறகும் மக்கள் ஆதரவு தங்களுடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த தேர்தல் வாய்ப்பாக அமையும் என்று தவெக கணக்கிடுகிறது. மேலும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையில் தவெக தலைமை உள்ளது. இதனால் 5 தொகுதிகளிலும் முழு வீச்சில் பிரசாரம் செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக

மறுபுறம், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த திமுகவும் இந்த இடைத்தேர்தலை மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் வலிமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. அதற்காக அனைத்து 5 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கும் முக்கிய அடித்தளமாக அமையும் என்று அக்கட்சி கருதுகிறது.

5 தொகுதி இடைத்தேர்தல்

குறிப்பாக ஆட்சியை இழந்த பிறகும் தங்களது வாக்கு வங்கி சிதையவில்லை என்பதை நிரூபிக்க இந்த தேர்தல் உதவும் என நம்பப்படுகிறது. ஆனால் அதிமுகவின் நிலைமை மட்டும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. தொடர் தேர்தல் தோல்விகள், உட்கட்சி மோதல்கள், முக்கிய நிர்வாகிகளின் வெளியேற்றம், சிலர் வேறு கட்சிகளுக்கு சென்றது போன்ற காரணங்களால் கட்சி இன்னும் சீராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்ற விவாதம் அதிமுக வட்டாரங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

மீண்டும் தோல்வி ஏற்பட்டால் கட்சிக்குள் புதிய பிரச்சனைகள் உருவாகலாம் என்ற அச்சமும் தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக சில அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள நிலையில், இடைத்தேர்தல் தோல்வி மேலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற கணிப்பும் உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கலாமா என்ற யோசனையும் அதிமுக தலைமையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் களம்

இதற்கிடையே நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகவும் தங்களது அடுத்தகட்ட முடிவை எடுக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையிலேயே 5 தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானதும் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+