எல்லாம் அந்த ஹர்சித் ராணாவுக்காக.. சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்? மீண்டும் தவறு செய்த கம்பீர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் (Siraj) தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக கம்பீரின் ஃபேவரைட் ஹர்சித் ராணா மற்றும் இளம் வீரர் குர்னூர் ப்ரார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சு வரிசையில் பிசிசிஐ எடுத்துள்ள சில அதிரடி முடிவுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்திய அணியின் முதன்மை மற்றும் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் இந்தத் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

Siraj

இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிராஜின் பங்களிப்பு முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா அல்லது ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டாரா என்பது குறித்து தேர்வுத் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், இந்த முடிவு தற்போதே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முகமது சிராஜிற்குப் பதிலாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் நம்பிக்கைக்குரிய மற்றும் 'ஃபேவரைட்' வீரராகக் கருதப்படும் ஹர்சித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்கு முன்பே ஹர்சித் ராணா காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து, பஞ்சாப்பைச் சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார்-க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் குர்னூர் ப்ரார் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணிக்கு பும்ரா கம்பேக் கொடுத்துள்ள சூழலில், சிராஜ்ஜை கம்பீர் கழற்றிவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளதால், வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. இதனால் இளம் வீரர்களை பிசிசிஐ தயார் செய்வதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+