பேச முடியாத இடத்தில் விஜய்.. டாப் தலைகள் மாயம்.. சான்ஸை பயன்படுத்திய எடப்பாடி.. இப்படி பண்ணிட்டாரே?
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களில் தவெக கொடி காட்டப்படுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி உயர்த்தி காட்டப்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டங்களில் திடீர் திடீர் என்று அதிமுக கொடிக்கு பதிலாக தவெக கொடி அடிக்கடி காட்டப்படுகிறது.

நேற்று நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடியுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சார்பாக இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு பக்கம் அதிமுக கொடி, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி காட்டப்பட்டது. இதை பார்த்து எடப்பாடி பழனிசாமி ஆரவாரமாக கையசைத்து பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசும் நேரம் முழுக்க இரண்டு பக்கமும் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அசைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தினர் சொல்வது என்ன?
இது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறுகையில்.. விஜய் தற்போது பதில் சொல்லும் சூழலில் இல்லை. அந்த கொடியை நாங்கள்தான் அசைத்தது என்று ஏற்க கூடிய அல்லது மறுக்க கூடிய சூழலில் விஜய் இல்லை. விஜய் இப்போது கரூர் விவகாரம் காரணமாக அப்செட்டில் இருக்கிறார். அவர் இன்னும் அந்த துயரத்தில் இருந்தே வெளியே வரவில்லை.
இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் இப்போது ஆப்சென்ட் ஆகிவிட்டார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகிவிட்டனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கரூர் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது பொதுச்செயலாளர் கடமை. ஆனால் அதே புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரங்களை எதிர்கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார். அவரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி ஆகிவிட்டது.
இன்னொரு பக்கம் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளார். இதுபோக ராஜ் மோகன், ஜான் ஆரோக்கியசாமி, அருண் ஆகிய தலைவர்களும் தலைமறைவாகி உள்ளனர். லயோலா மணி சில போஸ்டுகளை போட்டாலும் அதை டெலிட் செய்து கட்சிக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
கலவரத்தை தூண்டும் விதமாக போஸ்ட் செய்த ஆதவ் அர்ஜுனா தற்போது டெல்லியில் இருக்கிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அவரை சும்மா விடக்கூடாது. அவரை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற பென்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எடப்பாடிக்கு பதில் சொல்லும் சூழல் இல்லை
இவர்கள் யாரும் இப்போது எடப்பாடிக்கு பதில் சொல்லும் சூழலில் இல்லை. யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாது. அறிக்கை வெளியிட்டு மறுக்க முடியாது. ஆனால் இந்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொண்டு.. அதிமுக - தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என்றெல்லாம் பேசி வருகிறார்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதை விஜய் மறுக்கும் சூழலில் இல்லாத நிலையில்.. எடப்பாடி பழனிசாமியை அந்த வாய்ப்பை பயன்படுத்தி தவெக - அதிமுக கூட்டணியை பற்றி சூசகமாக தொடர்ந்து பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications