அசையுது அச்சாணி.. திமுகவுக்காக காத்திருக்கும் அதிமுக? வண்டிய "அப்படிக்கா" திருப்பும் எடப்பாடி.. மாஸ்
சென்னை: தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தி வருகின்றன..

அந்த வகையில் திமுக லீடிங்கில் உள்ளது.. தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 2வது கட்ட பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க போகிறது. இப்போதைக்கு கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக என்றே சொல்லலாம்.
ஜிகே வாசன்: ஆனால், அதிமுக, பாஜகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இவர்களுடன் ஏற்கனவே கூட்டணியிலிருந்த ஜிகே வாசன் போன்ற தலைவர்கள், அதிமுக, பாஜக என யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி உள்ளனர்... இதில், பாமக, தேமுதிகவும், பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, முதலில் உருவாவது அதிமுக கூட்டணியாகவே இருக்கும்.. தேர்தல் தேதிக்கு முன்பேயே, மொத்த வேட்பாளர் பட்டியலையும், தேர்வு செய்து, இறுதியே செய்துவிடுவார் ஜெயலலிதா. ஆனால், இப்போது அதிமுகவில் நிலைமையே தலைகீழாகிவிட்டது. இந்த கூட்டணி இழுபறிக்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
தொகுதிகள்: அதாவது, திமுக முதலில் கூட்டணியை முடிவு செய்து அறிவிக்கப்பட்டும் என்று காத்திருக்கிறதாம் அதிமுக மேலிடம்.. காரணம், காங்கிரசுக்கு திமுகவில் இந்த முறை குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது..
ஆனால், மற்ற கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதியை எதிர்பார்க்கின்றன. அப்படி குறைவாக தொகுதியை ஒதுக்கும்பட்சத்தில், சில கட்சிகள் அதிருப்தியால் வெளியேறக்கூடும் என்றும், அப்படி யாராவது வெளியேறினால் அவர்களுக்கு வலையை வீசி இழுக்கம், ரகசிய மூவ் அதிமுகவில் நடந்து வருவதாக சொல்கிறார்கள். அதனால்தான், பாமக, தேமுதிகவிடம்கூட, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டணி உறவு: பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டதுமே, திமுகவிலிருந்து சில கட்சிகள் தங்கள் பக்கம் வந்துவிடும் என்று அதிமுக மேலிடம் நிறையவே எதிர்பார்த்தது. ஆனால், ஒருத்தருமே அதிமுக பக்கம் வரவில்லை.. அவ்வளவு ஏன்? சொந்த கூட்டணியிலிருக்கும் கட்சிகளே இன்னும் தங்கள் முடிவை அறிவிக்காத நிலையே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், திமுகவின் கூட்டணிக்காக அதிமுக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மிகுந்த எதிர்பார்ப்பை அரசியல் கள்த்தில் ஏற்படுத்தி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications