தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வு! கோபாலபுரத்திற்கு காரை திருப்பும் எடப்பாடி? சீனியர்ஸ் சொன்னது என்ன?
சென்னை: அரசியல் கருத்து வேறுபாடுகளை தள்ளி வைத்துவிட்டு அனைத்து கட்சிகளின் பிரமுகர்களும் செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுதியதுடன் , ஸ்டாலினிடம் துயரம் பகிர்ந்துகொண்டனர். வரிசையாக பல கட்சி தலைவர்கள் வந்து முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்று முன் முரசொலி செல்வம் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அஞ்சலி செலுத்தினார். முரசொலி செல்வம் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக இருந்தவர் முரசொலி செல்வம்; கலைஞருக்கு முரசொலி மாறன் எப்படியோ, அப்படித்தான் முதல்வருக்கு முரசொலி செல்வம் என்று முரசொலி செல்வத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

ஓ பன்னீர்செல்வம் அஞ்சலி; முரசொலி செல்வத்தின் மறைவை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு கோபாலபுரம் சென்ற ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினுடம் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார். இரவு 9 மணி வரை முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டிலேயே இருந்தார்
ஓபிஎஸ் சிடம், கலைஞருக்கும் தனக்கும் முரசொலி மாறன் எப்படி பொது வாழ்க்கைக் கான வழிகாட்டிகளாக இருந்தாரோ, அதேபோல, மாறன் மறைவுக்கு பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்தவர் செல்வம் மாமாதான். அப்பாவின் (கலைஞர்) கண் அசைவைப் பார்த்தே முரசொலியில் முடிவுகளை எடுக்கும் திறன் செல்வத்துக்கு இருந்தது.
தலைவரின் (கலைஞர்) மனசாட்சியாக மாறன் இருந்த மாதிரி, எனது மனசாட்சி செல்வம் மாமா தான் என கண் கலங்கியவாறு சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி அஞ்சலி: இந்த நிலையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் என்ற செய்தி அதிமுக உள்வட்டத்தில் பரவியதால், சென்னை மா.செ.க்கள் அனைவரும் எடப்பாடியை தொடர்பு கொண்டு, ’’அண்ணே, கோபாலபுரம் செல்கிறீர்களா? '’ என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு, போவதா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருக்கிறேன். போகலாம்னு முடிவு செஞ்சா உங்க கிட்டே சொல்றேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களிடம் எடப்பாடி ஆலோசிக்க, ’’அஞ்சலி செலுத்தி விட்டு ; முதல்வரிடம் துக்கம் விசாரிப்பது தவறல்ல ! போய் வாருங்கள்’’ என சொல்லியிருக்கிறார்கள். அதனால், கோபாலபுரத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி போகவிருக்கிறார் என அதிமுகவில் திடீர் பரபரப்பு உருவாகி யுள்ளது.
கலங்கிய ஸ்டாலின், உதயநிதி: முரசொலி செல்வம் உடலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுத சம்பவம் அவரின் குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது. முரசொலி செல்வம் உடலை பார்த்து இன்று அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடைந்து போய் கண்ணீர்விட்டனர்.
முரசொலி செல்வமின் இறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications