Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நாங்க இருக்கோம்".. எடப்பாடி சொன்ன ஒரு வார்த்தை.. உற்று கவனித்த ஆளுநர்.. மீட்டிங்கில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆளுநர் ஆர். என் ரவியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தார். இந்த சந்திப்பில் நடந்தது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி பாஜக நிர்வாகி போல பேசுவதாகவும் , அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

ஆளுநர் தொடர்ந்து இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் பேசுவதை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளித்து உள்ளது.

 ஓபிஎஸ் பற்றி பேசினாரா?

ஓபிஎஸ் பற்றி பேசினாரா?

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பில் ஓ பன்னீர்செல்வம் பற்றி ஆளுநர் பேசியதாக செய்திகள் வந்தன. அதாவது நீங்கள் இருவரும் சேர்ந்து செயல்படுங்களேன் என்று ஆளுநர் கூறியதாக தகவல்கள் வந்தன. நீங்கள் இருவரும் சேர்ந்து செயல்பட்டால் கட்சி வலிமையாக இருக்கும். அதிமுக பழைய வலிமையை பெறும் என்று ஆளுநர் ஆர். என் ரவி சொன்னதாக செய்திகள் வந்தன. ஆனால் இது தொடர்பாக அதிமுகவினரிடம் விசாரித்ததில், ஆளுனர் ரவி எங்களிடம் அதை பற்றி எல்லாம் பேசவில்லை. நாங்கள் திமுகவிற்கு எதிராக புகார் வைத்தோம். அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டோம்.

ஆளுநருக்கு சப்போர்ட்

ஆளுநருக்கு சப்போர்ட்

இதற்காக லிஸ்ட் உருவாக்கி கொடுத்து இருந்தோம். அதை பற்றி பேசினோம். அவ்வளவுதான். ஓபிஎஸ் பற்றி எல்லாம் பேசினோம். அரசியல் ரீதியாக நாங்கள் பேசியது உண்மைதான். ஆனால் அதில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை.இந்த மீட்டிங்கில் திமுக பற்றி குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு இருக்கிறார். அதே சமயம் ஆளுநரிடம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டு இருக்கிறாராம். அதன்படி, திமுக உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. உங்களுக்கு எதிராக டெல்லியில் புகார் கொடுக்கிறது. நீங்கள் திமுகவிற்கு நெருக்கடி கொடுங்கள்.

வெளியே வந்து பாராட்டு

வெளியே வந்து பாராட்டு

உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம். திமுகவிற்கு சில அதிகாரிகள் துணையாக இருக்கிறார்கள். அதேபோல் போலீசாரும் துணையாக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால் திமுக அவர்களை செயல்பட விடவில்லை. அதிமுகவிற்கு போலீசார் நெருக்கடி கொடுக்கிறார்கள். பாஜகவிற்கும் போலீசார் நெருக்கடி கொடுக்கிறார்கள். நீங்கள்தான் இதை விசாரிக்க வேண்டும். திமுக கூட்டணி உங்களை எதிர்க்கிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அதிமுக கூட்டணி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் திமுகவை தொடர்ந்து கேள்வி கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி இந்த மீட்டிங்கில் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

டெல்லியில் கரிசனம்

டெல்லியில் கரிசனம்

எடப்பாடி பழனிசாமி சொன்னது அனைத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி கவனமாக கேட்டுக்கொண்டார். ஆனால் இவர் எதுவும் பெரிதாக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் வெறுமனே இதை கேட்டுகொண்டார். அதையடுத்துதான் திமுகவை நாங்கள் தீவிரமாக களத்தில் எதிர்த்து வருகிறோம் என்ற வார்த்தையை எடப்பாடி சொல்லி இருக்கிறாராம். அதாவது திமுகவை நாங்கள்தான் தீவிரமாக எதிர்க்கிறோம். இதை பாஜக கவனித்துக்கொள்ள வேண்டும், என்று எடப்பாடி சொல்லாமல் சொல்லியதாக கூறப்படுகிறது. அதாவது திமுகவை பாஜக எதிர்ப்பதில் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். பாஜகவும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

நாங்கள் மோதுகிறோம்

நாங்கள் மோதுகிறோம்

வழக்குகள் விசாரணைகளில் இருந்து எங்களை காக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தெரிகிறது. டெல்லியின் ஆதரவை பெறும் விதமாக எடப்பாடி இப்படி பேசியதாக தெரிகிறது. அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதால் பாஜக அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற போவதாகவும் பல்வேரு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த செய்திகளுக்கு இடையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி - எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு நடந்து இருக்கிறது. எடப்பாடி மீது சில பாஜக தலைவர்கள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வந்தன. இவை எல்லாம் உறுதி படுத்தப்படாத தகவல்கள்தான். பாஜகவிற்கு சமாதான தூது விடும் வகையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாம்.

அடக்கி வாசிப்போம்

அடக்கி வாசிப்போம்

இதையடுத்தே மீட்டிங் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ரவிக்கு குட் சர்டிபிகேட் கொடுத்தார். ஆளுநர் ரவி நன்றாக செயல்படுகிறார். அவர் சிறப்பாக பணிகளை செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குட் சர்டிபிகேட் கொடுத்தார். ஆளுநரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்றுதான் முன்பு நாங்கள்தான் திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்தோம் என்று கூறி வந்த எடப்பாடி, இப்போது திராவிட மாடல் ஆட்சி என்றால் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் என்று விமர்சனம் வைத்தார் என்கிறார்கள். ஆளுநருக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக எடப்பாடி இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுகவின் டாப் தலைவர்கள் யாரும் பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டாம். இப்போதைக்கு பாஜகவை எங்கும் விமர்சனம் செய்யாதீர்கள். கொஞ்சம் அடக்கியே வாசியுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+