என்னது.. ஜிவி பிரகாஷ் பாஜகவில் இணைகிறாரா? அமித்ஷாவை சந்தித்தது இதற்குதானா.. பேசியது என்ன? பரபர தகவல்
சென்னை: தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சந்தித்த நிலையில், இருவரும் பேசிக்கொண்டது என்ன என்ற விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
2 நாள் பயணமாக கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 24 முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரவு விருந்து அளித்து கலந்துரையாடினார்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் அமித்ஷாவின் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர்களான விஜய் குமார் ரெட்டி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆற்காடு நவாப் முஹம்மது அலி, உள்ளிட்ட பலர் அமித்ஷாவுடன் இந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு உரையாடினார்கள்.
இதில் அதிகம் பேசுபொருளானது ஜிவி பிரகாஷ் குமார்தான். ஏனென்றால் முன்னதாக அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்த அவர், தமிழ் தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பேசிய சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, "சென்னை வந்த அமித்ஷாவை சந்தித்த சிலரில் ஜிவி பிரகாஷ் குமாரும் ஒருவர். அதில் நமக்கு பேரதிர்ச்சி. ஜிவி பிரகாஷ் குமார் அமித்ஷாவை சந்திக்க சென்றது கேள்வியை எழுப்பும். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் போன் செய்து வாழ்த்து சொன்னேன். அப்போது பாஜகவில் சேர உள்ளீர்களே? எப்போது டெல்லிக்கு விமானம் என்று கேட்டேன்.
உடனே ஜிவி பிரகாஷ், 'இல்லவே இல்லை. எந்த காலத்திலும் நான் பாஜகவில் சேர மாட்டேன்' என்றார். பிறகு ஏன் அமித்ஷாவை சந்திக்க சென்றீர்கள் என்று கேட்டால், '9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் நல்லது கெட்டது பற்றி ஆலோசிக்க அழைத்தார்கள். அதற்காக நான் அங்கு சென்று சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்தேன்.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதில் நீங்கள் கை வைக்கக்கூடாது. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தால் தமிழ் மொழியை கேட்கவே முடியவில்லை. இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். தமிழ் மொழி, இனத்துக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று சொன்னேன்.
டெல்லி வந்தால் அவசியம் நமது வீட்டுக்கு வர வேண்டும் என்று அமித்ஷா அழைத்தார். அதேபோல் இங்கு உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. நீங்கள் புதிய கல்விக்கொள்கை என்று கொண்டு வந்து நம் மீது திணிக்கிறீர்கள். ஆனால், இங்கு அடிப்படை கட்டமைப்பே இல்லை என்றேன்.' என அமித்ஷாவிடம் தான் தெரிவித்ததாக சொன்னார்." என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications