மன்மோகன் சிங் மாதிரி சர்ப்ரைஸ் பிளானிங்? இந்தியா கூட்டணி மனதில் வைத்திருக்கும் பிரதமர்.. அட தமிழர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி யாருமே யூகிக்க முடியாத ஒரு பொருளாதார வல்லுனரை மனதில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தல் தீவிரமாக நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலின் இரண்டாம் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதி உள்ள நிலையில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.

Is INDIA alliance pitching Raghuram Rajan as their PM candidate in the worst case scenario

இன்று தேர்தல்; ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை தவிர கர்நாடகாவில் 18 தொகுதி, ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 88 தொகுதகிளில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

லோக்சபா தேர்தல் இந்தியா பிளான்: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி வரும் பட்சத்தில் ராகுல் காந்தியைதான் பிரதமராக அறிவிக்க கட்சி முடிவு செய்துள்ளதாம். ஆனால் ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காமல் இந்தியா கூட்டணியின் ஆதரவு தேவைப்பட்டாலும் ராகுல் காந்தியை முன்மொழியும் திட்டம் உள்ளதாம்.

ஆனால் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்க காங்கிரஸ் திட்டமிடுகிறதாம். அப்படிப்பட்ட சமயங்களில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி இறங்கி வரமாட்டார் .

ஆம் ஆத்மியும் இதற்கு தயாராக இருக்காது. இப்படிப்பட்ட சமயங்களில் மூன்று பேரை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மனதில் வைத்து இருக்கிறார்களாம். ஒருவர்.. மல்லிகார்ஜுனா கார்கே. இவர் தன்மையானவர். இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தலித் பின்னணி கொண்டவர். இதனால் கண்டிப்பாக இவரின் பெயரை காங்கிரஸ் முன்மொழியும் என்கிறார்கள். அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் தேசிய அளவில் இந்திய கூட்டணி சார்பாக முன்மொழியப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதையும் கூட இந்திய கூட்டணியில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரகுராம் ராஜன்: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மன்மோகன் சிங் போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவரையும் காங்கிரஸ் மனதில் வைத்துள்ளதாம். அவர் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். இவர் தமிழர். தற்போது திமுக தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கிறார்.

Is INDIA alliance pitching Raghuram Rajan as their PM candidate in the worst case scenario

இவரை மாற்று கட்சிகள் எதிர்க்க வாய்ப்பே இல்லை. மன்மோகன் சிங் போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலை கொண்டவர். பொருளாதாரம் அறிந்தவர். இதனால் இவரை முன்மொழியும் திட்டமும் காங்கிரஸ் மேலிடத்திற்கு இருக்கிறதாம். ராகுல் காந்திக்கு உள்துறை போன்ற பவர் புல் அமைச்சரவை வழங்கப்படலாம் என்றும் தகவல் வருகின்றன.

ஆனால் இதெல்லாம் இந்தியா கூட்டணி பெறும் இடங்களை பொறுத்தே முடிவாகும். அதே சமயம் இதுவரை பிரதமர் பதவி தொடர்பாக ரகுராம் ராஜனிடம் இந்தியா கூட்டணி அதிகாரபூர்வ ஆலோசனைகளை செய்யவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+