இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்
சென்னை: இஸ்லாமாபாத் டாக்ஸ் என்பது தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் வளர்ச்சி உலக நாடுகளால் கவனம் பெற்றுள்ளது.
"பாகிஸ்தானா... அது ஒரு திவாலான நாடு!" - இதுதான் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியல்தலைகளும், மேலை நாடுகளும் பாடிக்கொண்டிருக்கும் பல்லவி. கையில் காசில்லை, கடனில் மூழ்கிக்கிடக்கிறது, சீனாவின் 'செல்லப்பிள்ளை' என்றெல்லாம் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உலகையே அதிரவைத்திருக்கிறது ஒரு செய்தி. அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை, டெல்லியிலோ அல்லது நியூயார்க்கிலோ நடக்கவில்லை; இஸ்லாமாபாத்தில் நடக்கிறது!

இந்திய வல்லுநர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப்போயிருக்கிறார்கள். பாகிஸ்தான் எப்படி இந்த 'டிப்ளமேட்டிக் பவரை' (Diplomatic Power) பிடித்தது? இந்தியாவை முந்திவிட்டு தெற்காசியாவின் புதிய 'பவர் ஹவுஸ்' ஆக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா?
சீனாவின் நண்பன்... ட்ரம்ப்பின் 'ஃபேவரைட்' ஆனது எப்படி?
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பு 'இமயமலையை விட உயர்ந்தது' என்பது ஊரறிந்த ரகசியம். அப்படியிருக்க, சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானை எப்படித் தன் பேச்சுவார்த்தைக்குத் தேர்ந்தெடுத்தார்?
இங்குதான் பாகிஸ்தானின் புவிசார் அரசியல் (Geopolitics) முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கு எவ்வளவு நெருக்கமோ, அவ்வளவு தூரம் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தான் தேவைப்படுகிறது. குறிப்பாக, ஈரானுடன் தரைவழி எல்லையைப் பகிர்ந்துகொள்வதும், ஈரானியத் தலைமைக்கு ஓரளவேனும் 'ஆக்சஸ்' (Access) வைத்திருப்பதும் பாகிஸ்தான் மட்டுமே. ட்ரம்ப்பைப் பொறுத்தவரை அவருக்குத் தேவை 'வெற்றி'. அந்த வெற்றியை மிகக் குறைந்த செலவில், தமக்குச் சாதகமான ஒரு மேடையில் அரங்கேற்ற பாகிஸ்தான் கச்சிதமாகப் பொருந்தியது. 'யார் நண்பன்' என்பதை விட 'யார் காரியத்தை முடிப்பார்கள்' என்பதில் ட்ரம்ப் தெளிவாக இருந்தார்.
சவுதியின் பாதுகாப்பு... ஈரானின் நம்பிக்கை... இது எப்படி சாத்தியம்?
இங்குதான் பாகிஸ்தானின் வித்தை ஒளிந்திருக்கிறது. ஒருபுறம் சவுதி அரேபியாவுடன் 'பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mutual Defence Pact) போட்டுக்கொண்டு, அந்நாட்டிற்குத் தனது போர் விமானங்களை அனுப்பிப் பாதுகாப்பு அளிக்கிறது பாகிஸ்தான். மறுபுறம், சவுதிக்கு ஆகாத ஈரானோ, பாகிஸ்தானை ஒரு நடுநிலையாளராக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு அமர்ந்திருக்கிறது.
இதற்குக் காரணம், பாகிஸ்தான் ஒருபோதும் ஈரானுக்கு எதிராக நேரடி ராணுவ நடவடிக்கையில் இறங்கவில்லை. சவுதியின் பணமும், ஈரானின் நட்பும் தங்களுக்குத் தேவை என்பதைப் புரிந்துகொண்டு, இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோட்டில் பாகிஸ்தான் பயணம் செய்கிறது. சவுதிக்குத் தனது 'ராணுவ பலத்தை' விற்கிறது, ஈரானுக்குத் தனது 'பேச்சுவார்த்தை மேடையை' வழங்குகிறது. இந்த பேலன்ஸிங் ஆக்ட் (Balancing Act) தான் பாகிஸ்தானின் ராஜதந்திர வெற்றி.
இந்தியா தவறவிட்ட வாய்ப்பு?
"இந்திய வல்லுநர்கள் தேசபக்தி மிக்கவர்கள் என்றால், பாகிஸ்தானை எள்ளி நகையாடுவதை விட்டுவிட்டு, அவர்கள் எப்படி இந்த வாய்ப்பைப் பிடித்தார்கள் என்று அலச வேண்டும்" என்ற குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கின்றன. இந்தியா எப்போதும் 'ஸ்ட்ரேட்டஜிக் அட்டானமி' (Strategic Autonomy) என்று பேசிக்கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் மிகத் துணிச்சலாக அமெரிக்காவையும் ஈரானையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்துவிட்டது.
இந்தியா, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மிக நெருக்கமாகச் சென்றதால், ஈரானின் முழுமையான நம்பிக்கையைப் பெற முடியாமல் போனதா? அல்லது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதை விட, உலகளாவிய பிம்பத்தைக் கட்டமைப்பதில் இந்தியா அதிகக் கவனம் செலுத்தியதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்கலாம், ஆனால் அதன் ராஜதந்திரக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இப்போது இஸ்லாமாபாத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அதன் முழுப் பெருமையும் பாகிஸ்தானையே சாரும்.
தெற்காசியாவின் அதிகார மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினால், வெறும் பொருளாதார பலம் மட்டும் போதாது; சிக்கலான சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்க்கும் 'நடுநிலையாளர்' என்ற அந்தஸ்தும் தேவை. பாகிஸ்தானின் இந்த அதிரடி வளர்ச்சி, இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை!
-
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
அமெரிக்காவின் ரகசிய ஆயுதம்.. இது தெரியாம விளையாட கூடாது! -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்!











Click it and Unblock the Notifications